பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 நினைவு அலைகள் அழுக்கில்லாத, மடிப்புக் கலையாத, உடைக்கவர்ச்சி, ஆசிரியர்களுக்கு மிகமிகத் தேவை. பிஞ்சு உள்ளங்களில் முதலில், மதிப்பை ஏற்படுத்துவது ஆசிரியரின் தோற்றமே. கல்லூரி மாணவர்களும் தொள தொள உடையினரை மதிக்கமாட்டார்கள். இது கல்வி உளவியலின் அரிச்சுவடி. குறைந்த ஊதியமே பெற்ற முற்கால ஆசிரிய சமுதாயம் இதை நன்கு உணர்ந்து கல்வி நிலையங்களுக்கு மிடுக்கான உடையில் வந்தது. கைநிறையச்சம்பளம் பெறும் ஆசிரியர்கள்கூட இக்காலத்தில்'பஞ்ச உடையில் வந்து மாணவர்கள் மத்தியில் மதிப்பை இழக்கிறார்கள். உள்ளத்திலே வறுமை உணர்வைக் குத்திக்கொண்ட இவர்கள் எத்தனை சேர்த்து வைத்தும் பயன் என்ன? பிறப்பை மட்டுமே பாராட்டும் படுகுழியில் கிடந்த இந்திய சமுதாயம் தொண்டைப் பாராட்டத் தலைப்பட்டது. - இந்திய அரசு சிறந்த, நீண்ட பணிபுரிந்த நல்லாசிரியர்களுக்கு விருது வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தது. ஆண்டுதோறும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் 'நல்லாசிரியர்' விருது கொடுத்துப் பாராட்டுவது அத்திட்டமாகும். அத்திட்டத்தின் கீழ், சின்னசாமி, முதல் அணியிலேயே விருது பெற்றார். அதுவும் இவரை இறுமாப்புக் கொள்ளச் செய்யவில்லை. அதைவிடக் குறிப்பிடத்தக்க செய்தி, கோவை மாவட்ட ஆசிரிய சமுதாயம் முழுவதுமே திரு. சின்னசாமிக்குக் கிடைத்த விருதைப் பற்றிப் பூரித்தது. பதவிகளுக்குப் போட்டியிடத் தெரியாத நல்லாசிரியர் சின்னசாமி, அம்மாவட்டத்தில் எண்ணற்ற ஆசிரியர்களுக்கு நண்பராக, வழிகாட்டியாக, ஞானத் தந்தையாக விளங்கினார். எனவே, ஒவ்வோர் ஆசிரியரும் தமக்குக் கிடைத்த நல்லாசிரியர்' விருதாகவே கருதிப் பரவசப்பட்டார்கள். ஆனந்த விகடன் விருதுபெற்ற ஆசிரியர்களைப் பற்றித் தொடர்ந்து கட்டுரை எழுத முன் வந்தது. என்னை அணுகிற்று. விருது பெற்றவர் சிலர், பெறாதவர்கள் பலர். பல ஆசிரியமணிகளை விருது பெறாதவர்களையும் ஆனந்த விகடனுக்கு அடையாளம் காட்டினேன். அவ்வார இதழ், தகவல்களைத் திரட்டி வெளியிட்டுச் சிறப்புச் செய்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/380&oldid=787225" இலிருந்து மீள்விக்கப்பட்டது