பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெ_து. சுந்தரவடிவேலு 339 அக்காலத்தில ஆசிரியர் பற்றாக்குறை. இருப்பினும் விருது பெற்றதற்காக திரு. சின்னசாமிக்கு வேலை நீடிப்புக் கிடையாது. திரு. சின்னசாமி உரிய காலத்தில் ஒய்வுபெற்றார். பழைய சமுதாயம், சிலவேளை உளுத்துப்போன சமுதாயமாக இருப்பது உண்டு. நம் சமுதாயம் அநீதிகளின் தொகுப்பு என்பது என் மதிப்பீடு. பலருடைய மனம் புண்படுமே என்பதற்காகவும் இம் மதிப்பீட்டைப் பதிவு செய்யாமல், நழுவ நான் விரும்பவில்லை. சமுதாய அநீதிகளுக்கு எத்தனையோ அடையாளங்களை என்னால் காட்டமுடியும். இங்கே நான் சுட்டிக் காட்ட விரும்புவது பொது ஓய்வு பெற்ற எல்லாருக்கும் பென்சனைச் சமமாக்க வேண்டும் குறிப்பிட்ட ஒரு குறையை மட்டுமே காட்ட விரும்புகிறேன். திரு. சின்னசாமிக்கு முந்தியதலைமுறை ஆசிரியர்களுக்குச்சம்பளம் கட்டை, ஒய்வு ஊதியம் கிடையாது. ছালকgp பங்காளர், காமராசர் முதல் அமைச்சரான முதல் ஆண்டிலேயே எல்லாத் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் ஒய்வு ஊதியம் கொடுக்க ஆணையிட்டார். பின்னர், அதை உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு விரிவுபடுத் தினார். அடுத்த சில ஆண்டுகளில் தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கும் இந்த நன்மை நீட்டப்பட்டது. இவ்வாணைகள் அநீதியை ஒழித்தன என்று மனமகிழ்ந்தார் காமராசர். காலநீட்டம் அதைத் துளிர்க்க வைத்தது. எப்படி? 1-4-70 க்கு முன்பு ஒய்வு பெற்றவர்களுக்கு பென்சன் விழுக்காடு கட்டை; ஒய்வு ஊதியத்திற்கு மூன்றாண்டு சம்பளத்தின் சராசரி பார்க்க வேண்டும்; ஒய்வு ஊதியத்தின் உச்சவரம்பு தாழ்வானது. மேற்கூறிய தேதிக்குப் பின் ஒய்வு பெற்றவர்களுக்கு ஆண்டுச் சம்பளத்தின், சராசரியின் அடிப்படையில் 'பென்சன் விழுக்காடு அதிகம்; உச்சவரம்பு உயரம்; அரசு ஊழியர்களாக இருந்தால் இதோடு கிராசுவடி யும் அதிகம். 1978இல் பிறப்பித்த ஆணை இவற்றை இன்னும் தாராளமாக்கிற்று மகிழ்ச்சியே. முன்னே பிறந்து விட்ட குறை, முன்னே ஊழியம் பார்த்த குறை, '-டைச்சம்பளத்தை உயர்த்தக் கோரிக் கிளர்ச்சி செய்யாத குறைக்காக,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/381&oldid=787226" இலிருந்து மீள்விக்கப்பட்டது