பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 347 கார் சென்னையில், அப்போதைய மலைச்சாலையில் காஸ்மாபாலிடன் கிளப்பிற்குக் கிழக்கே உள்ள கட்டடத்திற்குள் நுழைந்து நின்றது. எவரை எதிர்பார்த்து, எங்களை அங்கு அழைத்துச் சென்றாரோ அவர் அங்கிருந்தார். இத்தகவலைக் கார் நின்ற நொடியில், திரு. வேதாசல முதலியார் தெரிந்துகொண்டார். "பாதி வெற்றி முதலியாரைப் பிடித்துவிட்டோம். மற்ற பாதி அவர் வழியாக' என்று சொல்லிக்கொண்டே படியேறிச் சென்றார். நாங்கள் அவரைப் பின்தொடர்ந்தோம். ராமசாமி முதலியார் செய்த உதவி இ மாடியில் யாரைக் கண்டோம்? ஜஸ்டிஸ்' என்ற ஆங்கில நாளிதழின் ஆசிரியரான திரு. ஆ. இராமசாமி முதலியாரைக் கண்டோம். அவர் கலகலப்பாகவே வரவேற்றார். எல்லோருக்கும் இருக்கை கொடுத்தார். பிறகு, திரு. வேதாசல முதலியார், என் தந்தையையும் அம்மானை யும் திரு ஆ. இராமசாமி முதலியாருக்கு அறிமுகம் செய்தார். 'இவர்களையா எனக்குத் தெரியாது! என்னைத் தெரியாத போதே, என்னை எதிர்த்து அவர்கள் சாதியைச் சேர்ந்த ஒருவர் போட்டியிடுவ தையும் பொருட்படுத்தாது, சட்டமன்றத் தேர்தலில், மாகறல் பிர்க்காவில் நூற்றுக்கு, தொண்ணுாறு விழுக்காட்டிற்கு மேல் வாக்குப் பெற்றுத் தந்தவர்கள் ஆயிற்றே. நம் கொள்கையில் உறுதியாக நிற்பவர்களாயிற்றே என்று திரு. ஆ. இராமசாமி முதலியார் பளிச்சென்று கூறினார். சுந்தரவடிவேலுக்கு மாநிலக் கல்லூரியில் பொருளியல் சிறப்பு வகுப்பில் இடம் கிடைக்கத் தவறிவிட்டது; இதைவிடக் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற இருவருக்கு இடம் கொடுத்து விட்டார்கள். எப்படியும் இவருக்கு இடம் பிடித்துக் கொடுக்க வேண்டும். அதற்காகவே இவர்களை இவ்வளவுதூரம் அழைத்து வந்திருக்கிறேன்' என்று திரு. வேதாசலம் கூறினார். அடுத்த நொடியே ஆசிரியர் திரு. ஆற்காட்டு இராமசாமி முதலியார் 'பொருளியல் பாடத்திற்கு மாநிலக் கல்லூரியைவிட, லயோலாக் கல்லூரி நல்லது. என் நண்பர், சங்கைக் குரிய பேஸ்னாக் அவர்களோடு இப்போதே தொலைபேசியில் பேசி, இடம் வாங்கித் தருகிறேன். அங்கே போகிறாயா, என்று என்னைப் பார்த்துக் கேட்டார். "" திகைத்தேன். என் முகம் வாடியது. அதைக் கண்ட திரு. வேதாசலம் எனக்காக அவரே, பதில் சொன்னார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/389&oldid=787236" இலிருந்து மீள்விக்கப்பட்டது