பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 நினைவு அலைகள் என்ன பதில்? இவனுக்கு ஒரு பெண் பிடித்திருக்கிறது. அதை முடித்து வையுங்கள், என்று கேட்க வந்தால், இன்னொரு பெண் நன்றாயிருப்பாள் என்று சொல்கிறீர்களே' என்று பதில் உரைத்தார். திரு. ஆ. இராமசாமி முதலியார் ஆத்திரங் கொள்ளவில்லை. மாறாக, சிரித்துக் கொண்டே, 'நமக்கு வேண்டியவர்கள் ஆயிற்றே என்று மாற்று ஆலோசனை கூறினேன். அதை இதோடு விட்டுவிடுவோம். மாநிலக் கல்லூரி முதல்வருக்கே பரிந்துரை கொடுக்கிறேன். அதை எடுத்துக் கொண்டு போய்க் கொடுங்கள். அவர் சொல்லும் பதிலையும் என்னிடம் வந்து சொல்லுங்கள் என்று கூறிவிட்டுத் தம்முடைய சுருக்கெழுத்தாளரைக் கூப்பிட்டு திரு. ஸ்டேதத்திற்கு ஒரு கடிதத்தை உரைத்தார். சுருக்கு எழுத்தாளர், அதைத் தட்டெழுத்தில் பதிந்து கொண்டு வந்தார். அதைப் படித்துப் பார்த்துவிட்டு, கையெழுத்திட்டுக் கொடுத்தார். எனக்கு வெற்றி கிட்டட்டுமென்று அன்புடன் வாழ்த்தியும் அனுப்பினார். கல்லூரி முதல்வர் முகம் சிவந்தது! திரு. வேதாசலம், எங்களைத் தம் காரில் மாநிலக்கல்லூரிக்கு அழைத்துப் போனார். முதல்வர் அப்போது அங்கு இல்லை. மீண்டும் போனோம். எனக்கு மட்டும் பேட்டி கிடைத்தது. உட்கார ஆசனமும் கிடைத்தது. திரு. ஆ. இராமசாமி முதலியாரின் கடிதத்தை திரு. ஸ்டேதத்திடம் கொடுத்தேன். பொறுமையாகக் கடைசிவரை படித்தார். ஆனால் முகம் சிவந்தது. "நீ பெற்றுள்ள மதிப்பெண்களுக்கு, பொருளியல் சிறப்பு வகுப்பில் இடங்கிடைத்திருக்க வேண்டும். நீ மனுவைப் பூர்த்தி செய்கையில் ஏதாவது தவறு இழைத்துவிட்டாய் போலும். இல்லையென்றால் இந்த மதிப்பெண்ணுக்கு எப்படி இடங்கொடாமல் தள்ளியிருப்பேன்' என்று மடக்கினார். நான் பதற்றம் அடையவில்லை. நான் தவறு செய்திருக்க முடியாது என்று உறுதியாக நம்பினேன். பிறர் தவறு செய்திருந்தால், அதைச் சுட்டிக்காட்டிப் பெறப்போவது ஒன்றுமில்லை என்றும் கருதினேன். எனவே, * தயவு செய்து என் மனுவை எடுத்துப் பாருங்கள். நான் தவறு செய்திருந்தால், இவ்வாண்டு எனக்கு இடம் கொடுக்காதீர்கள். அடுத்த ஆண்டு வந்து நிற்கிறேன்' என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/390&oldid=787240" இலிருந்து மீள்விக்கப்பட்டது