பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 349 பதிவு செய்வோர் செய்த தவறு 'நாளை பகல் பன்னிரண்டு மணிக்கு என்னை வந்து பார். அதற்குள் உன் மனுவை எடுத்துப் பார்த்து வைக்கிறேன். உன் பிழையால், உனக்கு இடம் கிடைக்காமற் போயிருந்தால், என்னைத் தொந்தரவு செய் யாதே; கொடுப்பதை எடுத்துக்கொள் என்று திரு. ஸ்டேதம் என்னிடம் கூறினார். ஒப்புக்கொண்டு வெளியேறினேன். திரு. வேதாசலம் இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தார். எங்கள் மூவரையும் சென்னையில் விட்டுவிட்டு, அவர் செங்கற்பட்டிற்குத் திரும்பிச் சென்றார். மறுநாள், மூவரும் மாநிலக் கல்லூரிக்குச் சென்றோம். குறித்த நேரத்தில் பேட்டி கிடைத்தது. என்னை நாற்காலயில் உட்கார வைத்துவிட்டு, 'உன் மனுவைப் பார்த்தேன். நீ சரியாக எழுதியுள்ளாய். அலுவலகத்தில் பதியும்போது, உன் பெயரை பெளதிகம் சிறப்புப் பட்டியலில் சேர்த்துவிட்டார்கள். எனவே, உன்னை பி.எஸ்.ஸி பட்டப் படிப்பிற்குத் தேர்ந்தெடுத்துள்ளேன். இன்னும் ஒரு மணியில் அறிவிப்புப் பலகையில் உன் பெயரைக் காணலாம். சம்பளப் பணத்தைக் கொண்டுவந்திருந்தால், உடனே கட்டிவிட்டுச் சேர்ந்துகொள்' என்று கல்லூரி முதல்வர் திரு. ஸ்டேதம், மளமளவென்று ஆங்கிலத்தில் கூறினார். அவர் பேசி முடித்ததும், 'ஐயா மன்னிக்கக் கோருகிறேன். நான் வேண்டுவது, சிறப்புப் படிப்பு: சாதாரணப் படிப்பு எனக்கு வேண்டாம். பெளதிகத்தில் இடம் கொடுப்பது கடினம்; என்னைக் காட்டிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள், அப்பிரிவுக்கு மனு செய்திருக்கக்கூடும். ஆகவே, பொருளியல் சிறப்பு வகுப்பில் என்னைச்சேர்த்துக் கொள்ளும்படி கோருகிறேன். அதற்குப் பாதுமான மதிப்பு எண்களை நான் பெற்றிருக்கிறேன் என்று கூறி வேண்டினேன். "ஆம், பொருளியல் சிறப்புப் பிரிவிற்கு உன் மதிப்பெண்கள் போதும். ஆனாலும் நீ காலந்தாழ்த்தி வந்துவிட்டாய். பன்னிரண்டு இடங்களும் நிரம்பிவிட்டன. இனி நான் என்ன செய்ய முடியும்?' என்றார் திரு. ஸ்டேதம். அந்தக் கால கட்டத்தில், விதிமுறைகளைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆகவே நான், 'அய்யா நான் நாட்டுப்புறத்தில் குடியிருப்பவன். எங்கள் ஊருக்கு வாத்திற்கு ஒரு முறையே அஞ்சல் வரும். காலந்தாழ்த்தி வந்ததற்கு ఆ5ు காரணம். தயவு செய்து, என்னைப் பொருளியல் சி2 வகுப்பில் பதின்மூன்றாவது மாணவனாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/391&oldid=787242" இலிருந்து மீள்விக்கப்பட்டது