பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Յ50 நினைவு அலைகள் சில நாள்கள்வரை பொறுத்திருக்கச் சொன்னால் பொறுத்திருக்கிறேன்' என்றேன். 'உறுதியாகச் சொல்வதற்கு இல்லை. வகுப்பு இடங்களை நானாக அதிகப்படுத்திவிட முடியாது. நீ, இப்போதைக்கு, பி.எஸ்.ஸி. (பெளதிக) வகுப்பிற்குச் சம்பளம் கட்டிவிடு. பின்னர் முடியுமானால், உன்னைப் பொருளியல் (சிறப்பு) வகுப்பிற்கு மாற்றித் தருகிறேன்' என்றார் கல்லூரி முதல்வர். 'கட்டளைக்குக் கீழ்ப்படிகிறேன். இன்றைக்கே சம்பளம் கட்டிவிடுகிறேன். தயவு செய்து, கல்லூரி திறக்கும்போதாகிலும் மாற்றிக் கொடுங்கள். இல்லாவிடில் ஒராண்டு காலத்தை வினாக்கிவிட்டு, மீண்டும் மனுச் செய்துவிட்டு, தங்களுக்குத் தொல்லை கொடுக்க நேரிடும். ஏனென்றால், எனக்குச் சிறப்பு (ஆனர்ஸ்) படிப்பு மட்டுமே பிடிக்கிறது; இல்லாவிட்டால், பொறியியல் கல்லூரிக்குப் போயிருப்பேன்' என்று கூறி வேண்டினேன். ஆம் நீ முயன்றிருந்தால், உனக்குப் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கும். இப்போது, என்னாலான உதவி செய்ய முயல்கிறேன்' என்றார் கல்லூரித் தலைவர். நான் நன்றி சொல்லிவிட்டு, விடைபெற்றுக் கொண்டேன். கீழ் தளத்திற்கு வந்து காத்திருந்தேன். பி.எஸ்.ஸி (பெளதிகப்) பட்டியல் ஒட்டப்பட்டது. உடனே அலுவலகத்தில் சம்பளத்தைச் செலுத்தினேன். பிறகு ஊருக்குத் திரும்பினேன். பதின்மூன்றாவது மாணவனாகச் சேர்ந்தேன் கல்லூரி திறப்பதற்கு முதல் நாள் சென்னைக்கு வந்தேன். கல்லூரி முதல்வரைக் கண்டேன். என்னைப் பொருளியல் சிறப்பு வகுப்புக்கு மாற்றும்படி ஒரு சீட்டில் எழுதிக்கொடுத்தார். அதை அலுவலகத்தில் சேர்த்தேன்; கூடுதலாகக் கட்ட வேண்டிய சம்பளத்தைக் கட்டினேன். அந்த வகுப்பில் பதின்மூன்றாம் மாணவனாகச் சேர்ந்தேன். கல்லூரி முதல்வர், கூடுதலாக ஒர் இடம் கேட்டு, சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு எழுதி, சிறப்பு அனுமதி பெற்றாராம். அவ்விடத்தில் நான் சேர்க்கப்பட்டேன். என்று அலுவலகத்தில் கேள்விப்பட்டேன். "பதின்மூன்று நல்ல எண்ணல்ல. இன்னும் யாராவது, தொல்லைப்படுத்தி, பதினான்காக்கிவிடட்டும்', என்று பேச்சுவாக்கில் சொன்னார், ஒர் எழுத்தர். ஆனால் பதினான்காம் ஆள் சேரவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/392&oldid=787244" இலிருந்து மீள்விக்கப்பட்டது