பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 351 பொருளியல் சிறப்பு வகுப்புகளில் மற்ற வகுப்புகளைப்போல நாள்தோறும் அய்ந்து மணிகள் பாடம் சொல்லிக் கொடுப்பதில்லை. நாளைக்குச்சராசரி இரண்டு மணிகள் வகுப்பு நடக்கும். மற்ற நேரம் ஊர் சுற்றித் திரிவதற்காகவா? இல்லை. சிறப்பு வகுப்பில் சேர்வோர், வகுப்பு அறைகளில் பாடம் கேட்பதைவிட், அதிகமாகத் தாமே முயன்று, பலநூல்களைக் கற்க வேண்டும். மாணவர்களைச் சொந்தக் கால்களில் நிற்கப் பழக்குவதே குறிக்கோள். என் வகுப்பு மாணவர்கள் பலபேர், இந்த எதிர்பார்ப்பிற்கு ஏற்ப நடந்துகொண்டார்களென்று கூறலாம். என் வகுப்பில் சேர்ந்தவர்களில், இருவர் ஏற்கெனவே என் நண்பர்கள். அவர்கள் திருவாளர்கள் சொக்கலிங்கமும் இராமகிருஷ்ணனும் என்று நினைவுபடுத்துகிறேன். மற்றவர்கள், வெவ்வேறு கல்லூரிகளிலிருந்து வந்தவர்கள். ஒரிசாவில் உள்ள பெர்ஆம்பூரிலிருந்து செல்வி மனோரமா என்பவர் சேர்ந்திருந்தார். மேலும் செல்வி சாரதா என்னும் மாணவியும், செல்வி மெக்லியட் என்னும் ஆங்கிலோ இந்திய மாணவியும் அவ்வகுப்பில் படித்தார்கள். திரு. அகாஇலாலி என்பவர் பெங்களுரிலிருந்து வந்து சேர்ந்தார். திரு. பவானி சங்கர் என்பவரும் பெங்களுரில், இண்டர்மீடியட் படித்துவிட்டு, நான் படித்த சிறப்பு வகுப்பில் சேர்ந்தார். திரு. வாசுதேவன், திரு. கிருஷ்ணமூர்த்திராவ், திரு. நாராயணராவ் ஆகியோர் சகமாணவர்கள். மற்றும் இருவர் பெயர்கள் நினைவில் இல்லை. 44. தேர்தல் களத்தில்! இலாலியின் முடிவை மாற்றினேன் திரு. அகாஇலாலி, வெள்ளைவெளேரென்று இருப்பார். நல்ல -யரம் ஒத்தை நாடி உடம்பு. நன்றாகச் செதுக்கியது போன்ற மூக்கு, விழிகள். அவர் விக்டோரியா மாணவர் விடுதியில் சேர்ந்தார். ஆண்டின் தொடக்கம் எல்லா விடுதிகளிலும் கிண்டல் பருவம்': விக்டோரியா விடுதியில் திரு. இலாலியை லீலாவதி என்று அழைத்துக் கிண்டல் செய்ய முனைந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/393&oldid=787246" இலிருந்து மீள்விக்கப்பட்டது