பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 353 எனவே, இரண்டு மூன்று கூட்டங்களிலேயே, அக்கல்லூரியில், குறிப்பிடத்தக்க பேச்சாளர்களில் ஒருவர் என்னும் புகழைப் பெற்றுவிட்டார். _ திரு. இலாலியின் புகழ் எனக்குச் சங்கடமான ஒரு சூழ்நிலையை உருவாக்கியது. மாநிலக் கல்லூரி மாணவர் பேரவைப் பொறுப்பாளர் பதவிகளுக்குத் தேர்தல் நடந்தது. திரு. இலாலி செயலாளர் பதவிக்குப் போட்டியிட விரும்பினார். என் ஆதரவை வேண்டினார். திரு. இலாலி என் நண்பர் என்பதோடு மற்ற எல்லா வகையிலும் அப்பதவிக்குத் தகுதி படைத்தவர். எனவே, நான் நொடியும் தயங்கவில்லை. அவருக்காக, வாக்குதேட உடன்பட்டேன். என் நிலை என்ன? மாநிலக் கல்லூரியில், என்னுடைய இரண்டாம் ஆண்டு முதல், மாணவர்களிடம் வாக்குகளைச் சேர்க்கும் கலை, எனக்குப் பழக்கமாகிவிட்டது. யாரை விட்டும் பதுங்கிப் போகாத, என் அக்கால இயல்பு எனக்கு உதவிற்று. இரண்டு நாள்களுக்குப் பிறகு, மற்றொரு பழைய நண்பர் என்னை அணுகினார். தாம் கல்லூரித் தேர்தலில் போட்டியிடப் போவதாகச் சொல்லி, வாக்குச் சேகரிக்கும் பொறுப்பை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டார். இலாலி எனக்கு அறிமுகமாவதற்கு முன்பே, இவர் எனக்கு வேண்டியவர். நான் ஏற்கெனவே இலாலிக்கு வாக்குக் கொடுத்து விட்டதைப் பதிலாகக் கூறினேன். இருவரில், தாமே எனக்கு நீண்டநாள் நண்பர் என்பதைச் சுட்டிக்காட்டி வற்புறுத்தினார். அதற்காகவும் நான் சொன்ன சொல்லைத் தவற முடியாது என்றேன். தேர்தல் காய்ச்சல் கண்டுவிட்டால், ஏதேதோ உளற நேரிடும். அந்நிலை என்னுடைய பழைய நண்பருக்கு ஏற்பட்டது. சொன்ன சொல்லைக் காப்பாற்றினேன் "என்ன இருந்தாலும் அவர் மைசூர்க்காரர். முஸ்லீம். அப்படியிருக்க நீ போய் அவருக்கு வேலை செய்யலாமா? வாக்குக் கொடுத்ததற்காக உன் வாக்குச்சீட்டை வேண்டுமானால், அவருக்குக் கொடு; எவரிடமும் அவருக்கு ஆதரவாகப் பேசாதே. இந்த அளவு உதவியைச் செய்' என்று வேண்டினார். அவருடைய வாதமே அவருக்குப் பகையாகிவிட்டது. 'செயலாளர் பதவிக்குப் பேச்சுத் திறன், அவை அஞ்சாமை, பல பெரியவர்களைக் கண்டு பேசி, கல்லூரிக் கூட்டத்திற்கு அழைத்துவரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/395&oldid=787250" இலிருந்து மீள்விக்கப்பட்டது