பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 361 நான்காம் நாள் அதிகாலை, ப. ச. கைலாசம் கார் வந்தது. என்னை டாக்டர் குருசாமி பங்களாவிற்கு அழைத்துச் சென்றது. டாக்டர் குருசாமிக்கு மகிழ்ச்சி. டானிக் எழுதிக் கொடுத்தார். மருந்துக் கடைக்குச் சென்று அதை வாங்கிக்கொண்டு விடுதிக்குத் திரும்பினோம். அடுத்த நாள் பகல் வரை காய்ச்சல் வரவில்லை. மனநிறைவோடு உறவினர்கள் ஊர் திரும்பினார்கள். 46. மீண்டும் விக்டோரியா விடுதியில் விக்டோரியா விடுதிக்கு மகளிர் வரக்கூடாது நான் சில நாள்கள் விடுதியில் ஒய்வு எடுத்துக் கொண்டேன். அப்போது விடுதி ஊழியர்களும் சமையற்காரர்களும் என்னைக் கருத்தோடு கவனித்துக் கொண்டார்கள். பிறகு.? வழக்கப்படி, கல்லூரிக்கு ஒழுங்காகச் சென்றேன். தவறிப் போன பாடங்களை விடுதியில் கற்றுக் கொண்டேன். ஆண்டின் இறுதியில் விடுதி விழா நடக்கும். அப்போது வெளியிலுள்ள நண்பர்களை விருந்தாளியாக அழைப்பது உண்டு. முதல் ஆண்டின் இறுதி விழாவின்போது எங்கள் வகுப்பில் படித்த மாணவிகளை விருந்தாளிகளாக அழைக்க எண்ணினோம். திரு. இலாலி, இரண்டொரு வகுப்பு நண்பர்களோடும் பேசினார். தனித்தனியாக அழைப்பதற்குப் பதில் விடுதியிலுள்ள பொருளியல் சிறப்பு முதல் வகுப்பு மாணவர் சார்பில் மூன்று மாணவியர்களை அழைப்பதே முறையென்று முடிவு செய்தார்கள். அதுவரையில் எங்கள் விடுதி விழாவிற்குப் பெண்களை அழைக்கும் உரிமை இல்லை. எனவே, நாங்கள் நால்வர் விடுதிக்காப்பாளரை அணுகினோம். எங்கள் எண்ணத்தைக் கேட்டதும் உறுதியாக மறுத்துவிட்டார். நாங்கள் கிளர்ச்சி செய்ய நினைக்கவில்லை; அடங்கிப் போனோம். பல்கலைக்கழகத் தேர்வு வந்தது. ஆங்கிலத்தில் எழுதும் தேர்வினை எழுதிவிட்டு ஊருக்குச் சென்றேன். அன்றைய விக்டோரியா விடுதி விதிப்படி, ஒருவர் தொடர்ந்து ఇro கல்வி ஆண்டுகளுக்குமேல் தங்கக்கூடாது. நான் இண்டர்மீடியட்டில் ஈராண்டும், சிறப்பு வகுப்பில் ஒராண்டும் ஆக అత్రాలు ஆண்டுகள் தங்கிவிட்டேன். அடுத்துள்ள ஈராண்டுகள் எங்கே அங்குவது , இக் கேள்வி பிறந்தது. இத்தகைய நிலைக்கு வந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/403&oldid=787268" இலிருந்து மீள்விக்கப்பட்டது