பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 363 'வெங்கடேசுவராவிடுதியில் சேரவேண்டும். அங்கு மூன்று திங்கள் தங்கியபின் விக்டோரியா விடுதிக்கு மனுப்போட வேண்டும். "இடைவெளிக்குப்பின் மீண்டும் சேருவது பற்றி விதிமுறைகள் ஊமையாக உள்ளன; சேரக்கூடாதென்று சொல்லவில்லை. ஆகவே சேர்க்கலாம். சில திங்கள் வெளியே இருந்துவிட்டால் மறுபடியும் புதிதாகச் சேர்க்க முடியும். இதுவரை அப்படி நடக்கவில்லை என்பதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். உனக்கு அந்த உதவி கிடைக்கும். அதற்கு ஏற்பாடு செய்து விட்டேன்' இப்படிப் பதில் கிடைத்தது. 'ஆய்வாளர் இராமையாவுக்கு நல்ல தொடர்பு உண்டு. இயக்குநர் அலுவலகத்தில் எவரிடம் சொல்ல வேண்டுமோ அவரிடம் சொல்லியே ஏற்பாடுகளைச் செய்துள்ளார். 'பொதுக்கல்வி இயக்குநர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் நினைத்தால் நடக்காததும், திரு. நாராயணசாமி அய்யர் நினைத்தால் நடக்கும். 'அவர் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவார். திறமையும் நேர்மையும் உடைய அவர் பேச்சை நம்பி, இப்போதைக்கு வெங்கடேசுவரா விடுதியில் தைரியமாகச் சேர்ந்துவிடு. 'பின்னர் நினைவுபடுத்துங்கள். ஆய்வாளர் இராமையா தொடர்ந்து செய்ய வேண்டியதைச் செய்வார். இப்படி மேலமையூர் திரு. வேதாசலம் கூறினார். மனத்திற்குப் பிடிக்காவிட்டாலும் வாக்குறுதியில் முழு நம்பிக்கை ஏற்படாவிட்டாலும் வேறுவழியின்றி, வெங்கடேசுவரா விடுதியில் சேர்ந்தேன். இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள மாநிலக் கல்லூரிக்கு நடந்து செல்லும் தொல்லையைத் தாங்கிக் கொண்டேன். வெங்கடேசுவரா விடுதியில் சில புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். திரு. அனவரதமும், திரு. சிவஞானமும் நினைவிற்கு வருகிறார்கள். இருவரும் பிற்காலத்தில் அரசு ஊழியத்தில் சேர்ந்தார்கள். மாவட்ட நீதிபதியாக ஒருவரும், அதே நிலை அலுவலராக இருவரும் உயர்ந்ததாக நினைவு. அழுக்குப் படியாத, மடிப்புக் கலையாத உடையோடு எப்போதும் *ாட்சியளித்த அவர்களை, உடையில் பின்பற்ற நான் முயன்றது உண்டு. “ன்னால் ஏற்றுக்கொள்ள முடியாத அலைகீழ்ச் செல்வாக்கு s魯" திங்கள் கழிந்தன. குறுகிய கால விடுமுறை வந்தது. பிசிமாற்ற முயற்சி முளைத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/405&oldid=787271" இலிருந்து மீள்விக்கப்பட்டது