பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு ՅՅ5 நிலை சரியல்ல என்னும் கருத்தொன்று 1930 திலேயே என் உள்ளத்தில் முளைத்துவிட்டது. அது வளர்ந்து தழைத்துவிட்டது. பிற்காலத்தில் என்னுடைய பெயரில், கண்டவர்கள் நிர்வாகம் செய்யும் நிலைக்குச் சிறிதும் இடங்கொடாமை என்னுடைய முத்திரை ஆகிவிட்டது. = அவரவர் நிலைக்கு அவரவர் அடங்கிவிட வேண்டிய சூழ்நிலை உருவானது. ருசி கண்ட பூனைகள் எங்கெங்கோ தாவின. விளைவைப் பின்னர் விவரமாகத் தெரிவிக்கிறேன். பண்பாட்டைப் பயின்றோம் விக்டோரியா விடுதியில் மீண்டும் சேர்ந்தபிறகு, வாழ்க்கை வழக்கம் போல் ஒடிற்று. நூறு மீட்டர் நடந்தால் கல்லூரி. அங்கிருந்து இருபது மீட்டர் நடந்தால் 'மீன் காலேஜ் சிற்றுண்டிச் சாலை; அங்கே நாலனாவிற்கு நாலு "டீ". வகுப்புகளுக்கிடையே ஒய்வு நேரம் கிடைத்தால் அச் சிற்றுண்டிச் சாலைக்குச் செல்வோம். பீங்கான் குடுவை அளவு தேனிர் கேட்போம். நான்கு கோப்பைகள் வரும். ஆளுக்கொரு கோப்பைத் தேனிர் ஊற்றிக் கொள்வோம். சிறுகச் சிறுக உறிஞ்சியபடியே வகுப்பில் படித்த பாடங்களைப் பற்றி விவாதிப் போம்; புது நூல்களில் வந்துள்ள கருத்துகளை அலசிப் பார்ப்போம். தேனிர் குடிக்கும் சாக்கில், முக்கால் மணிபோல், அறிவைத் தீட்டுவோம். சிலவேளை உரையாடல் காரசாரமாகிவிடும். இருப்பினும், எவரும் வெகுண்டு வெளியேறியதில்லை; முகத்தில் விழிப்பதில்லை என்னும் சூளுரையை எப்போதும் எவரும் எடுத்ததில்லை. எங்கள் நண்பர்களில், பல நிலைப் பண்பாளர்கள் இருந்தார்கள் என்று சொல்லலாம். கல்லூரிக்கு வந்த நாங்கள் செய்திகளை தகவல்களை கருத்துகளைத் இாட்டுவது முதற் கடமை என்பதில் உறுதியாக இருந்தோம். இப்பணிக்குச் சமமாக மற்றொன்றையும் கருதினோம். அது என்ன? பண்பாட்டை, பல திறப்பட்டாரோடு கலந்து வாழ்வதைக் கற்றுக் கொள்வதிலும் ஆர்வம் காட்டினோம். "ங்கள் கல்லூரிப் பருவத்தில் தேர்தலுக்குக் குறைவில்லை. போட்டிகள் சூடுபிடிக்கத் தவறியதில்லை.

  • "ால் வன்முறை, நினைப்பில்கூடத் தலைகாட்டியது இல்லை.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/407&oldid=787275" இலிருந்து மீள்விக்கப்பட்டது