பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு Յ67 தொழில் புரட்சியின் விளைவாக முன்னர் பெருஞ்செல்வர்களே நினைக்கக்கூடிய பொருள்களை, சாதாரண மக்களும் வாங்கக் கூடிய நிலை உருவாகியது. இது தொழில் புரட்சியால் விளைந்த நன்மை. இது முதலாளித்துவத்தால் பராமரிக்கப்படுகிறது.' இப்படிப் பாடத் திட்டத்தில் குறித்துள்ளபடி விளக்கினார். அவ்வேளை, எனக்கு அடுத்து உட்கார்ந்திருந்த மாணவர், சட்டென்று குதித்தெழுந்து நின்றார். பேராசிரியர், தம் பேச்சை நிறுத்தினார். முதலாளித்துவ ராஸ்கல் களாகிய நீங்கள் சொல்லக்கூடியது இவ்வளவுதானா?' என்று உணர்ச்சிப் பெருக்குடன் கனல் கக்கக் கேட்டார், மாணவர். வகுப்பிலுள்ள மாணவர்கள் அனைவரும் திடுக்கிட்டுப் போனோம். அக்கால மாநிலக் கல்லூரிக்குத் தனிச்சிறப்பு உண்டு. அது என்ன? கீழ்த் தரமான சொற்களோ, நடவடிக்கைகளோ அங்கே எந்த நிலையிலும் தலைகாட்டா. ராஸ்கல் என்ற சொல் எங்களை அதிர்ச்சியடைச் செய்தது. நாங்கள் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், பேராசிரியர் கள்ளுக்காரன், குறிப்பிட்ட மாணவரை அமரும்படி கையால் குறிப்புக் காட்டினார். மாணவர் படபடப்போடு அமர்ந்தார். என் கையைப் பிடித்துக் கொண்டார். அவருக்கு வியர்த்துக் கொட்டியது. "இளம் சோசியலிஸ்டுகளாகிய நீங்கள், பொறுப்புகளுக்கு வரும்போது, இதைவிட நல்ல நடவடிக்கைகளைக் காட்டுவீர்கள் என்று நம்புகிறேன் என்று பேராசிரியர், கிண்டல் கலவாது, வெகுளி புகாது, அமைதியாக ஆரூடம் கூறினார்; கூறிவிட்டுப் பாடத்தைத் தொடர்ந்து நடத்தினார். என் நண்பருக்கு இருக்கை கொள்ளவில்லை. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்துக் கொண்டிருந்தது. கடைசியில் வகுப்பு முடிந்தது. அனைவரும் வகுப்பு அறையிலிருந்து கலைந்து சென்றோம். அடுத்த மணி எங்களுக்கு ஒய்வு நேரம். உணர்ச்சி வயப்பட்டுச் சொல்லக்கூடாத வார்த்தையைச் சொல்லிவிட்ட என் நண்பர், என்னைத்துணைக்கு அழைத்துக்கொண்டு பேராசிரியர் கள்ளுக்காரன் அறைக்குப் போனார். நாங்கள் பேராசிரியர் அறைக்குள் நுழைந்ததும் எப்போதும்போல, புன்முறுவலோடு ఇ7ుత్రాణావా வரவேற்றார். வழக்கம்போல, எதிரிலுள்ள நாற்காலிகளைக் '-டி உட்காரச் சொன்னார். 'பரவாயில்லை அய்யா' என்ற நாங்கள் சொன்னோம்.

பேசலாம் என்று பேராசிரியர் ஆணைக்குக் பட்டு அமர்ந்தபின் தழதழத்த குரலில், வினாடி ஆத்திரத்தில்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/409&oldid=787279" இலிருந்து மீள்விக்கப்பட்டது