பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு Յ69 என்று வியப்பிலும் இடையிடையே அவநம்பிக்கையிலும் காலங்கழித்தோம். தேர்வுகள் வந்தன. அவற்றையும் முடித்தோம். பொருளியல் பிரிவு மாணவர்கள் விடைபெறும் விழா, தேர்வுக்கு முன்னரே நடந்துவிட்டது. கடைசித் தேர்வு அன்று மாலை, எங்களுக்குப் பாடமெடுத்த பேராசிரியர் கள், வழியனுப்புத் தேiைர் விருந்தளித்தார்கள். இது நெடுநாளைய மரபு. வழியனுப்புத் தேனிர் விருந்திலும் பேராசிரியர் கள்ளுக்காரன் எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசியதைப் போன்றே, என் நண்பரிடமும் கலகலப்பாகவே கலந்துரையாடினார். தேர்வின் முடிவுகள் வந்தன. என் நண்பர், எதிர்பார்த்த தரத்தில் தேர்ச்சி பெற்றார். பேராசிரியர் கள்ளுக்காரன், பழிவாங்கும் உணர்வோடு மதிப்பீட்டில் தலையிட வில்லை என்பது புலனாயிற்று. ஒவ்வொருவரும், நடத்தை பற்றிய சான்றிதழைப் பெறும் பொருட்டு, பேராசிரியர்களிடம் சென்றோம்; அவற்றைப் பெற்றோம். கடுஞ்சொற்களைப் பயன்படுத்திய மாணவருக்கும் சான்றிதழ் கொடுத்தார், பேராசிரியர் கள்ளுக்காரன், கறைபடுத்தாத சான்றிதழைக் கொடுத்தார். 'மன்னித்து அருளிய இப்பேராசிரியர் அல்லவா உண்மையான கிறுத்துவர் என்னும் நினைவோடு கல்லூரி உலகை விட்டு வெளியேறினோம். ஆண்டுகள் உருண்டன; அலைச்சல்கள் இடைப்பட்டன; வசந்தமும் வந்தது; வாழ்வும் முளைத்தது. பதவிகளும் வந்தன: உயர்வுகளைப் பெற்றோம். ஏறத்தாழ கால் நூற்றாண்டுக்குப்பின், பொதுக்கல்வி இயக்குநர் என்னும் நிலையில், நான் அண்டை மாநிலத்தில் கூடிய அனைத்திந்திய கல்விக் கூட்டத்திற்குச் செல்ல நேர்ந்தது. அம்மாநில அரசின், விருந்தினர் விடுதியில் தங்கினேன். அங்கே குறிப்பு ஒன்று எனக்காகக் காத்து இருந்தது. நண்பரின் நன்றி உணர்வு ராஸ்கல் புகழ் நண்பர். அம்மாநில உயர்நீதிமன்ற நடுவராகப் '*முடன் இருந்தார். அவர் என்னை விருந்திற்கு அழைக்கும் குறிப்பு சிது. அதைப் பார்த்த நான், அந்த நண்பரோடு, தொலைபேசியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/411&oldid=787283" இலிருந்து மீள்விக்கப்பட்டது