பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 3.71 மாறாக, தினையளவு உதவியைப் பெறத் தவறிய வேளை, செய்த மலையளவு உதவியையும் மறந்துவிடும் தீயோர் நிறைந்த சமுதாயத்தில், உதவிசெய்ய முன்வருவோர் அரிதாவர். இத்தெளிவு விருந்திற்கு முன்னரே வந்தது. மாநிலக்கல்லூரி வாழ்க்கைக்கு திரும்புவோம். பேராசிரியர் கள்ளுக்காரன், தேர்வுகளில் புதுமை புகுத்த முயன்றார். டிசம்பரில் ஒரு பாடத்திற்கு, மரபுவழி எழுத்துத் தேர்வைக் கொடுத்தார். மற்றொன்றுக்கு நூல்களை வைத்துக்கொண்டு, அவற்றைப் பார்த்துப் பதில் எழுதும் முறையைக் கொடுத்தார். மூன்றாவது தேர்வு முழுக்க முழுக்க வாய்மொழித் தேர்வாக நடந்தது. இந்தப் புதிய சோதனையில் நான் பெற்ற நிலை என்ன? மூன்றிலும் தேர்ச்சி. ஆனால்? நினைவில் வைத்து எழுதும் தேர்வில்தான் நான் அதிக மதிப்பெண்கள் பெற்றேன். பார்த்து எழுதுவதில், முந்தியதிலும் சில எண்கள் குறைவாகவே பெற்றேன். வாய்மொழித் தேர்வில் இன்னும சில எண்கள் குறைந்துவிட்டன. இருப்பினும், கடைசி ஆள் அல்ல; நடுநிலையில் இருக்குமளவு மதிப்பெண்கள் பெற்றேன். 48. விடுதலைப் போரில் கலந்து கொள்வதா, கூடாதா? கருத்துப் போர் நான் பொருளியல் சிறப்பு வகுப்பில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது தமிழ்நாட்டில் வாதப்போர் ஒன்று சிறிதுகாலம் நடந்தது. அது, இந்திய விடுதலைப் போராட்டத்தில், தன்மான இயக்கத்தவர் கள் பங்குகொள்ளலாமா, கூடாதா?’ என்பதைப் பற்றிய கருத்துப்போர். தந்தை பெரியாரும் மிகப் பெரும்பாலோரும் காந்தியடிகளின் உப்புக் காய்ச்சும் போராட்டம் போன்றவற்றில் தன்மான இயக்கத்தவர்கள் பங்குகொள்ளக்கூடாதென்று கருதினார்கள். 'வகுப்புரிமையைக் கொள்கை அளவிலும் ஏற்றுக் கொள்ள 'சிறுக்கும் காங்கிரசுக்கு ஆதரவாக இருப்பது, கொள்ளிக்கட்டையை °டுத்துத் தலையைச் சொறிந்து கொள்வதற்கு ஒப்பாகும்' என்று அவர்கள் கருதினார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/413&oldid=787286" இலிருந்து மீள்விக்கப்பட்டது