பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37.2 நினைவு அலைகள் 'சூடு பிடித்துள்ள விடுதலை இயக்கத்திலிருந்து தனிமைப் பட்டிருந்தால், காங்கிரசு முழுக்க முழுக்க சென்னை சத்தியமூர்த்தி அய்யர், தஞ்சை பந்துலு அய்யர், மட்டப்பாறை வெங்கட்ராம அய்யர். திருச்சி டி.எஸ்.எஸ். இராஜன் அய்யங்கார் போன்றவர்களின் ஆதிக்கத்தில் சிக்கிவிடும். நமக்குரிய பங்கைக் கேட்பதில் வலுவிழந்து நிற்போம். 'எனவே, விருப்பமுள்ள தன்மான இயக்கத்தவர்கள், காங்கிரசின் போராட்டத் திட்டங்களில் எதிலாகிலும் பங்குகொள்ள விடப்பட வேண்டும் இது இயக்கத்தினர் சிலருடைய கருத்து. நீதிக்கட்சியின் தமிழ் நாளிதழாகிய திராவிடனில் இதுபற்றி இருதரப்புக் கட்டுரைகள் வந்தன. நானும் முதன்முறை கட்டுரை ஒன்றை எழுதத் துணிந்தேன். அதைத் திராவிடன் வெளியிட்டது. - பெரியாரின் சமதர்ம ஒளி என்னுள் பிறவியில் வந்த சாதி உணர்வைச் சுட்டெரித்து விட்டது. அதன் விளைவாக 1930ஆம் ஆண்டின் குடிக்கணக்கின்போது, நான் சாதி, சமயம் இல்லாதவன் என்று என்னைப் பற்றித் தெரிவித்து விட்டேன். அதே நேரத்தில், வனமலர்ச் சங்கத் தொடர்பு, அதன் முன்னணியில் நின்ற பெரியசாமித் தூரன் எல்.கே. முத்துசாமி, கு.சு. பெரியசாமி, பி. ஆயண்ணன், சி.சுப்பிரமணியம், ஒ.வி. அளகேசன் ஆகியோரின் நெருக்கம், என்னை விடுதலை வேட்கையாளனாக உருவாக்கியது. எனவே, விடுதலைப் போராட்டம் சூடுபிடித்து இருப்பதாக நினைத்துக் கொண்டேன். விடுதலைக்குப் பின்னும் பார்ப்பனர் அல்லாதார் வகுப்புரிமைக்குக் கடுமையாகப் போராடவேண்டியிருக்கும். 'இருப்பினும் அப்போது 1930, 31, 32 ஆண்டுகளில் நடந்து வந்த விடுதலைப் போராட்டங்களில், முடிந்தால் பங்குகொள்ள வேண்டும்; முடியாவிட்டால், பிறவகை ஆதரவு கொடுக்க வேண்டும். என்னவானாலும் காந்தியப் போராட்டங்களுக்கு எதிர்ப்பாக நிற்றல் ஆகாது. இப்படிப் பொருள்பட, நான் சர்தார்' என்ற புனைபெயரில் எழுதிய கட்டுரையைத் திராவிடன் வெளியிட்டது. அது எண்ண அலைகளை மக்களிடம் எழுப்பிற்றோ இல்லையோ, எனக்குத் தெரியாது. ஆனால் எங்கள் கருத்து, காங்கிரசை ஆதரிக்கும் கருத்து, தன்மான இயக்கத்தில் முளையிலேயே அடியோடு பட்டுப் போயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/414&oldid=787288" இலிருந்து மீள்விக்கப்பட்டது