பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 நினைவு அலைகள் கேட்டால், பிறந்த சாதியைச் சொல்லிவிடுவார்கள். நீங்கள் ஏன் உங்கள் சாதியைச் சொல்வதில் இவ்வளவு அடம்பிடிக்கிறீர்கள்?' என்று நாராயணசாமி கேட்டார். 'அய்யா! நான் சுயமரியாதை இயக்கத்தவன். தாங்கள் குறிப்பிட்ட நண்பர்கள் மூத்த தலைமுறையாக இருக்கலாம். இளைய தலை முறையைச் சேர்ந்தவர்களாக இருப்பின் என்னைப் போலவே பதில் சொல்லியிருப்பார்கள்' என்றேன். திரு நாராயணசாமி, என்னுடைய பதிலைக் கேட்டுச் சினங் கொள்ளவில்லை. இரு கைகளையும் பிடித்துக்கொண்டு குலுக்கினார். என்னை மனமார வாழ்த்தினார். அவருடைய நட்பு வளர்பிறைபோல் வளர்ந்தது. பாரதிக்கு நான் ஜப்பானில் நவயுகம்' என்னும் கட்டுரையும் முதன்மையாளர் என்னும் சிறுகதையும் அடுத்தடுத்து எழுதி யனுப்பியது நினைவில் இருக்கிறது. இரண்டுமே பாரதியில் சிறப்பாக வெளியாயின. தொடர்ந்து எழுதச் சொல்லித் தூண்டினார். எழுதினேனா? என்ன எழுதினேன் என்பது நினைவில் இல்லை. ஏன்? என் வாழ்க்கையில் முதன்முதல் சலசலப்பைக் காண நேர்ந்தது. மூன்று நான்கு ஆண்டுகள் வேலையில் இருந்தவர்களைக்கூட வீட்டுக்கு அனுப்பிய காலகட்டத்தில், நான் கல்லூரியில் தேர்ச்சி பெற்றேன். வேலையைப் பற்றி விளம்பரமே அரிதாக இருந்த காலம் அது. நான் வேலை தேடி அலைவதோடு, என்னைத் தேடி அலைவோர் தலைகாட்டிய பருவமும் ஆக இருந்தது? 49. பேராசிரியர் பிராங்கோ சமபந்தி முறைக்கு முயற்சி என்னுடைய மாணவப் பருவத்தின் இறுதி ஆண்டில் ஒரு நெருக்கடி ஏற்பட்டது. அதைச் சமாளிக்கப் புதுமையான முறையை மேற்கொள்ள நேரிட்டது. நான் தங்கியிருந்த காலத்தில் விக்டோரியா மாணவா வடுதியில், தாவர உணவு உண்பவர்களுக்குள்ளேயே இரு பிரிவுகள் இருந்தன. ஒரு பிரிவு பார்ப்பனர்களுக்கு; மற்றொன்று பார்ப்பனர் அல்லா தாருக்கு. இரண்டிற்கும் தனித்தனிச் சமையற்கூடம்; உணவுக்கூடம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/418&oldid=787295" இலிருந்து மீள்விக்கப்பட்டது