பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 377 ஒரோர் வேளை, பார்ப்பன மாணவர் எவராது, எங்கள் உணவுக் கூடத்திற்கு வந்து, எங்கள் பலகாரத்தை உண்பதுண்டு. ஏதாவதொரு நண்பனின் விருந்தாளியாகப் பதிவதுண்டு. பார்ப்பனரல்லாதார் அப்படிச் செய்ய முடியாது. பார்ப்பனர்களின் உணவுக் கூடத்தில் நுழையக்கூடாது. பல்லாண்டுகளாகத் தொடரும் இக்கொடுமையைப் பற்றி நாங்கள் கொதிப்படையவில்லை; பொறுத்துக் கொண்டு காலத்தை ஒட்டினோம். ஆனால்? 1932 ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்களில் பார்ப்பன உணவுப் பிரிவின் பிரதிநிதியும், சில பார்ப்பன மாணவர்களும் என்னிடம் வந்தார்கள். தாங்கள் கொண்டு வந்த மனுவை எனக்குக் காட்டினார்கள். பார்ப்பனப் பிரிவைச் சேர்ந்த அனைவரும் அதில் கையெழுத்து இட்டிருப்பதைச் சுட்டிக் காட்டினார்கள். அதைப் பின்பற்றி, நான் கையெழுத்திடவேண்டும்; அதோடு மற்றப் பார்ப்பனரல்லாத சைவ மாணவர்களிடமும் கையெழுத்து வாங்கிக் கொடுக்க வேண்டுமென்று கேட்டார்கள். அந்த மனுவில் கண்டிருந்த வேண்டுகோள், கோரிக்கை என்ன? மரக்கறி உண்போர் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட அனுமதிக்க வேண்டுமென்பது கோரிக்கை. இரு சமையற் கூடங்களையும் இணைத்துவிட வேண்டுமென்றும் அம்மனு வேண்டிக் கொண்டது. 'பார்ப்பனரல்லாத மாணவர்களோடு உட்கார்ந்து சாப்பிட எல்லாப் பார்ப்பன மாணவர்களும் இசைவு தந்து விட்டார்களா?' என்று அவர்களைக் குறுக்கு விசாரணை செய்தேன். 'நம் விடுதியிலுள்ள எண்பத்தெட்டுப் பார்ப்பனர்களில், எண்பது பேர்கள் இசைவு தந்து விட்டார்கள். எட்டுப் பேர்கள் ஒப்பவில்லை. அதற்காக நாம் பிரிந்து உட்கார்ந்து சாப்பிடத் தேவையில்லை. அதே நேரத்தில் அந்த எட்டுப் பேரைக் கட்டாயப்படுத்தத் தேவையில்லை. அவர்களோடு பேசி ஒரு முடிவுக்கு வந்து விட்டோம். 'எங்களுக்கு ஒரு சமையற்கூடமும் இரு உணவுக் கூடங்களும் உள்ளன. உங்களுக்கு ஒரு சமையற் கூடமும் ஒரு சாப்பாட்டுக் கூடமும் 5 — Grтаттябт. 'எங்கள் சமையல் அறைக்கு அடுத்துள்ள உணவுக் கூடத்தை அந்த ஒட்டுப் பேருக்கு ஒதுக்கிவிடுவோம். அங்கே நாம் யாரும் போகமாட்டோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/419&oldid=787297" இலிருந்து மீள்விக்கப்பட்டது