பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 நினைவு அலைகள் 'மற்ற இரு இடங்களிலும் நாம் எல்லோரும் கலந்து உண்போம். 'பழமை விரும்பிகள் இதற்கு உடன்படுகிறார்கள். அந்த நிபந்தனை யோடு கையெழுத்திட்டுள்ளார்கள். கலந்து உண்ணலாம் என்று நாங்களே முன்வந்த பிறகு, தயக்கம் ஏன்?' என்பது வந்தவர்களின் பதில். அவர்கள் என்னிடம் ஏன் முதலில் வந்தார்கள்? சிறிய, பெரிய தேர்தல் எதிலும் போட்டியிடாமல் - ஆனால், சூத்திரதாரியாகவே - இயங்கி வந்த என்னை, அவ்வாண்டு உணவுக்கூடப் பொறுப்பாளராக்கி விட்டார்கள்; ஒரு மனதாக அப்பொறுப்பை என்மேல் சுமத்தி விட்டார்கள். விடுதியில் இருந்தவர்களில் நான் மட்டுமே ஐந்தாவது ஆண்டாகத் தங்கியிருந்தேன். மூத்தவன் என்னும் முறையில் அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய கடமை இருப்பதாக நினைத்தேன். அது, என்னை இப்படி ஒரு எதிர்பாராத வம்பிலே சிக்க வைக்குமென்று, அப்போது கனவிலும் நினைக்கவில்லை. பார்ப்பன மாணவத் தோழர்களின் விருப்பப்படி அவர்கள் கொண்டுவந்த மனுவில் கையெழுத்திட்டேன். என் பிரிவில் இருந்த மற்றவர்களிடமும் கையெழுத்து வாங்கினேன். கரும்பு தின்னக் கூலி கேட்பார்களா? எல்லோரும் மிகுந்த மகிழ்ச்சியோடு கையெழுத் திட்டார்கள். பிறகு, பார்ப்பனப் பிரிவின் பொறுப்பாளரும் நானும், மேல் வகுப்பு மாணவர்கள் ஐந்தாறு பேருமாக எங்கள் விடுதிக் காப்பாளர் பேராசிரியர் பிராங்கோவைப் பேட்டி கண்டோம். பணிவோடு வந்த காரணத்தை விளக்கினோம். தனியாக உண்ண விரும்பும் எண்மரையும் அப்படியே விட்டுவிட்டு மற்றவர்களுக்கு மட்டும் ஒரே சாப்பாட்டுக் கூடமாக ஏற்பாடு செய்தால் போதும் என்றோம். மனுவைக் கொடுத்தோம்; பேராசிரியர் பிடிவாதம் பேராசிரியர் பிராங்கோ அதைப் பொறுமையாகப் படித்தார். உடனடி பதில் பளிச்சென்று இறுத்தார். என்ன பதில்? 'இப்போதுள்ள முறையை மாற்ற முடியாது. யார் யாரோடு கலந்து உண்ண வேண்டுமென்று சொல்வது உங்கள் வேலையல்ல. 'இதோ! சுந்தரவடிவேலு பார்ப்பனரல்லாத பிரிவின் பொறுப்பாளன் ஆனதற்காக, ஏதோ செய்துகாட்ட வேண்டுமென்று எண்ணி இப்படி ஒரு கலாட்டாவைத் தொடங்குகிறான் போலும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/420&oldid=787301" இலிருந்து மீள்விக்கப்பட்டது