பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 379 அதற்கு நீங்களும் துணைவந்துவிட்டீர்களா? போய் உங்கள் படிப்பைக் கவனியுங்கள். 'நெ.து. சு. நீ இதோடு இதைக் கைவிட்டுவிடு. இல்லாவிட்டால் விடுதியை விட்டு விலக்க நேரிடும் ' என்று மிரட்டினார். நான் அஞ்சவில்லை; அமைதியாக நின்றேன். உடன் வந்தவர்கள், இதில் முயற்சி எடுத்தது பார்ப்பன மாணவர்களே என்று அடக்கத்தோடு விளக்கினார்கள். தங்கள் வேண்டுகோளின் பேரிலேயே நான் கையெழுத்து இட்டதோடு மற்றவர்களையும் கையெழுத்திடச் செய்ததாகவும் எடுத்துரைத்தார்கள். என் பேரில் எவ்விதப் பிழையும் இல்லை; பழி சொல்வதானால் தங்களைத்தான் சொல்ல வேண்டும் என்றும் சொன்னார்கள். 'இந்தக் கதையை நான் நம்பத் தயாராக இல்லை. நீ கட்டுப்பட்டு நடக்காவிட்டால் விளைவுக்கு என்னைக் குற்றம் சொல்லாதே!' என்று என்னைப் பார்த்து மீண்டும் மிரட்டினார். காலம் உண்மையைக் காட்டும் அய்யா! அப்போதாவது நான் இக்கோரிக்கைக்குப் பொறுப்பு அல்ல என்பது தெரியும்' என்று பதில் உரைத்தேன். எல்லோரும் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தோம். அந்த வெள்ளைப் பருவத்தில் உண்மையை எவரும் நம்ப மாட்டார்கள். உண்மையை மெய்ப்பிப்பதே அரிது. நடிப்புக்கு அடிமை உலகம் என்று எனக்குத் தெரியவில்லை. பேராசிரியர் பிராங்கோவின் மிரட்டலை நான் காற்றோடு விட்டுவிடும் நிலையிலும் இல்லை. ஏன்? ஐந்து திங்களில் பல்கலைக் கழகத் தேர்வு வரும். அத்தேர்வில் என் விடைத் தாள்களை மதிப்பிடப்போவது, இப்பேராசிரியரும் அவர் தோழர்களுமே. அப்போது, அவர் என்மேல் பழிதீர்த்துக் கொள்ளக்கூடும். என் விடைத்தாளில் சுன்னம் போட்டாலும் அதைக் கேட்க நாதி இல்லை. மூன்றாண்டுப் படிப்பும் வீணாகும் வகையில்தோல்வி முத்திரை குத்திவிடவும் கூடும். அது தவறினால், எனக்கு நன்னடக்கைச் சான்று வழங்க மறுக்கக்கூடும். சான்றிதழ் இல்லாவிட்டால், எல்லோருமே கொலைகாரனை இதுக்குவது போல் வெறுத்து ஒதுக்குவார்கள். எனவே, நாம் சும்மா இருக்கக்கூடாது. 'நான் சமபந்தி முறைக்குத் தூண்டுகோல் அல்ல என்பதை விளக்கக்கூடியவர்களும் தென்படவில்லை. o 77GQ, என்னையே எண்ணி, பெரும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு உள்ளானேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/421&oldid=787303" இலிருந்து மீள்விக்கப்பட்டது