பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 நினைவு அலைகள் அசைவப் பிரிவில் சேர்ந்தேன். கருத்தொன்று மின்னிற்று. அது சரியானது என்று தென்பட்டது. உடனே வெளியூர் பேருந்து நிலையத்திற்குச் சென்றேன். வாலாஜாபாத் வழியாகக் காஞ்சிபுரம் செல்லும் வண்டி ஏறினேன். வாலாஜாபாத்தில் இறங்கி, ஊர் போய்ச் சேர்ந்தேன். அப்போது என்னை நெய்யாடுபாக்கத்தில் எதிர்பார்க்காத என் தாய் திகைப்பில் ஆழ்ந்தார்; ஏதோ என்னமோ என்று அச்சங்கொண்டார். ஒன்றும் இல்லை; பார்த்துவிட்டுப் போகவே வந்தேனென்று சொல்லி அமைதிப்படுத்தினேன். வயலுக்குப் போயிருந்த என் தந்தையைத் தேடிச் சென்றேன்: கண்டேன்; அவருடைய வியப்பை மாற்றினேன். மெல்ல, நான் மாட்டிக்கொண்டுள்ள வம்பைப்பற்றிக் கூறினேன். 'அடுத்த நான்கைந்து திங்கள், என் படிப்பிற்கு மிக முக்கியமானவை. அப்படியிருக்க, நானாகத் தேடாவிட்டாலும் இப்படியொரு வம்பு வந்து என்னைக் கெளவிக்கொண்டிருக்கிறது? விடுதியைவிட்டு விலகினால், வெளியே படிப்புக்கு வசதியான இடம் கிடைப்பது அரிது. விடுதியில் அடங்கி இருந்தாலும் பேராசிரியர் தம் தப்பெண்ணத்தை மாற்றிக்கொள்ள மாட்டார். அது, என் தேர்வைப் பாதிக்கலாம். அதற்கு ஒரு பரிகாரம் தோன்றிற்று. அதைச் சொல்லி அனுமதி பெற்றுப்போக வந்துள்ளேன். "எங்கள் விடுதியில் அசைவ உணவுப் பிரிவு இருக்கிறது. அதில் நாள்தோறும் காய்கறி உணவும் உண்டு. அச்சமையல்காரர்களோடு பேசினேன். காய்கறி உணவைத் தனியாக எடுத்து வைத்து, எனக்குப் பரிமாறுவதாகச் சொன்னார்கள். தனிக் கரண்டியில் விழிப்பாகப் பரிமாறுவதாகவும் சொன்னார்கள். - "இப்போதைய சிக்கலில், அவ்விடுதிக்கு மாற்றிக்கொள்வது நல்லது என்று நினைக்கிறேன். அப்படி மாறினால், உணவுக்கூடப் பொறுப்பாளர் பதவி என்னைவிட்டுப் போய்விடும்: விடுதிக் காப்பாளரின் வெகுளி அப்போதாகிலும் தணியலாம்' என்றேன். "நீ, மரக்கறியே சாப்பிடுவதாக வாக்குறுதி சொல்லத் தேவை யில்லை. நீ நினைக்கிறபடி மாறிக்கொள். 'ஆனால் உன்னுடைய அம்மா காதில் போடாதே. அப்படிக் கேட்டதும் மூச்சு நின்றுவிடும் உன் அம்மாவுக்கு. இது நம் இருவரோடு இருக்கட்டும். நீ சென்னைக்குப் போ. காஸ்மாபாலிடன்' பிரிவில் சேர்ந்துகொள். எதைப்பற்றியும் கவலைப்படாமல் படி' என்று என் தந்தை விடை கொடுத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/422&oldid=787305" இலிருந்து மீள்விக்கப்பட்டது