பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 383 பேராசிரியர் செய்த தவறு எங்களுக்கோ எங்களைப் பற்றியே சிந்தனை. அடுத்துப் பேராசிரியர் பிராங்கோவின் சான்றிதழ் பெறச் சென்றேன். என்னைப் பார்த்ததும் அவருடைய முகம் மாறிவிட்டது. 'நினைக்காமலே, நான் உனக்குத் தீங்கு செய்துவிட்டேன். இவ்வாண்டு தேர்வுக் குழுவிற்கு நான் தலைவர். முடிவுகளை ஒப்பிடும்போது, பொருளியல் சிறப்புத் தேர்வில் இருவர் தாங்களாகவே முதல் வகுப்பு பெற்றுவிட்டார்கள் என்பது தெரிந்தது. நீ மூன்றாவது இடத்தில் இருந்தாய். "நீ, 840 மதிப்பெண் பெற்றிருந்தால் தானாகவே உனக்கு முதல் வகுப்பு கிடைத்திருக்கும். ஆனால் உனக்கு 830 மதிப்பெண் மட்டுமே கிடைத்தது. நூற்றுக்கு ஒரு விழுக்காடு குறைந்தால் அதை மன்னித்து அடுத்த மேல் வகுப்பில் போடுவது, அதுவரை பின்பற்றிய முறை. அம்முறையை ஒரு குழு உறுப்பினர் நினைவுபடுத்தினார். அதே நேரத்தில் என்னுடைய வரலாற்றுப் பிரிவில் எவருமே முதல் வகுப்பை எட்டவில்லை. அப்படியே விட்டுவிட்டால் எனக்கு இழுக்கு. 'எனவே, என் பிரிவில் இருவருக்கு முதல் வகுப்புக் கிடைக்கும் வகையில் முடிவுகளை மாடரேட்' பண்ணினோம். அவ்வாறு செய்ததன் மூலம் உன்னைப் பலி கொடுத்துவிட்டேன். -- 'மரபு வழி அளவுகோலை உன்னைப் பொறுத்த வரையில் பின்பற்றவில்லை. நீ பாதிக்கப்படுகிறாய் என்று அப்போது தெரியாது. நான், அறியாமல் செய்ததவறால் நீ இரண்டாம் வகுப்பில் தேர்ச்சிபெற நேர்ந்தது. ஆயினும், பல்கலைக் கழகத்தில் உனக்கே மூன்றாவது இடம்' என்று ஆறுதல் கூறினார். இது அதிர்ச்சி ஊட்டியது: ஆத்திரம் ஊட்டவில்லை. இரு பெரிய மனிதர் வீட்டுப் பிள்ளைகளைத் தூக்கிவிட்டார்; என்னைக் காலை வாரி விட்டார், கிறுத்தவராகிய பிராங்கோ. பின்னாலே சிலரால் முதுகில் குத்தப்பட்டேன். அதற்கு முன்னோடியாக அப்போதே இப்படி நடந்துவிட்டது. தகுதிக்குக் குறைவான முத்திரையைப் பெற்றுக்கொண்டு, நல்ல சான்றிதழ்களோடு, கல்லூரியைவிட்டு வெளி உலகிற்குள் நுழைந்தேன். பேராசிரியரின் செயலை நினைக்கும்போதெல்லாம், இருக்கும் போது ஒருவரைக் கடுமையாகத் தூற்றிவிட்டு, இறந்தபிறகு, அவர் சிறப்புகளைச் சொல்லிச்சொல்லிக் கண்ணிர் வடிக்கும் தமிழர் அவலம் நினைவுக்கு வருவதுண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/425&oldid=787312" இலிருந்து மீள்விக்கப்பட்டது