பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 385 கிட்டத்தட்ட இரண்டாவது உலகப்போர் தொடங்கும் வரையில், விலைவாசி வீழ்ச்சி நீடித்தது என்று சொல்லலாம். எனவே எண்ணற்ற குடும்பங்களைப்போல் எங்கள் குடும்பத்திற்கும் பயிர்த் தொழில் வருவாய் குறைந்தது. நாட்டைக் கெளவிய பணமுடையினால், புதுச் சாலைகள் போடுதல், ஏரிகளைச் செப்பனிடுதல் போன்ற ஆக்க வேலைகளில் சுணக்கம் ஏற்பட்டது. எனவே, ஒப்பந்த வேலைகள் குறைந்தன; என் தந்தையாருக்குமே இவ்வாய்க்காலும் வறட்சி அடையத் தொடங்கிற்று. இவற்றிற்கு மேலாக, என் தந்தையார் மேற்கொண்ட நடவடிக்கை ஒன்று தொல்லை கொடுத்தது. ஒப்பந்தக்காரரும் பொறியியலாரும் அக்காலத்தில் பொதுப்பணிக்கு டெண்டர் போடுவோர், மதிப்பீட்டுத் தொகைக்கும் குறைவாக வேலையை முடிக்க முன்வருவது உண்டு. சிலவேளை ஒப்பந்தக்காரர்கள் சிலர், ஒர் உடன்பாட்டிற்கு வந்து, அவர்களுக்கு நல்ல இலாபம் கிடைக்கும்படி ஏற்பாடு செய்து கொள்வார்கள். அப்பகுதியில் நடக்கும் பெரிய வேலைகளை யார் யார் எடுத்துக் கொள்வதென்ற அடிப்படையில் ஒர் இரகசிய உடன்படிக்கைக்கு வந்துவிடுவார்கள். அநேக சமயங்களில் அவ்வேலைகளை மேற்பார்வையிடவேண்டிய பொறியரே முன்வந்து அத்தகைய உடன்படிக்கையை ஊக்கப்படுத்துவ துண்டு. அப்படி உடன்படிக்கைக்கு வந்தவர்கள், உண்மையில் போட்டியிட மாட்டார்கள்: போட்டி போடுவதுபோல் நடிப்பார்கள். அவ்வளவு தான். பெயரளவில், ஒவ்வொருவரும் சிறுசிறு விழுக்காடு குறைத்து வேலைசெய்வதாக விண்ணப்பிப்பார்கள். இரகசிய உடன்படிக்கையில், குறிப்பிட்ட வேலையை எவருக்கு விட்டுவிடுவதென்று முடிவு செய்கிறார்களோ, அவர் மேலும் சிறிது "சித்துக் கொண்டு, பணியைச் செய்து கொடுப்பதாக எழுதிக் கொடுப்பார். இப்படி டெண்டர் என்பது பெயரளவில் நிற்கும். வேலைகளை எடுப்போர். சாதாரணமாகத் தாராளமாகப் பணம் பண்ன முடியும். ஏரி நிறைந்தால் சுற்றியுள்ள கிணறுகளின் நீர்மட்டம் உயரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/427&oldid=787316" இலிருந்து மீள்விக்கப்பட்டது