பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 நினைவு அலைகள் அதுபோல், ஒப்பந்தக்காரர்களுக்கு இலாபம் பெருகினால், பொறியியல் துறையினருக்கும் இதுவும் அதுவும் தாரளமாக வந்து சேரும். தங்களுக்குள் பேசிக்கொண்டு, கட்டுக்கோப்பாகச் சம்பாதித்துக் கொண்டிருந்த சூழலில், என் தந்தை நுழைந்தார். அது ஏற்கெனவே ஒப்பந்தக்காரர்களாக இருந்தவர்களுக்குச் சிவபூசையில் கரடி புகுந்ததுபோல இருந்தது. என் தந்தையைச் சம்பாதிக்கத் தெரிந்த கூட்டணியில் இழுத்துக் கொள்ளத் தயங்கினார்கள். திரு ஆற்காடு இராமசாமி போன்றவர்களை என் தந்தை அறிந்தவராயிற்றே என்று மிரண்டார்கள். விலகி நின்றார்கள். இந்த காஞ்சிபுரத்தில், மருத்துவசாலைத் தெருவில், கால்நடை மருந்தகக் கட்டடம் ஒன்றைக் கட்ட முன்வந்தது, அப்போதைய சென்னை அரசு. கட்டடத்திற்கு நாற்பத்தெட்டாயிரம் போல் செலவாகும் என்று மதிப்பீடு போட்டு இருந்தார்கள். ஒப்பந்தக்காரர்களைக் கோரும் அறிவிப்பு வந்தது. என் தந்தையும் டெண்டர் கொடுத்தார். கிட்டத்தட்ட மதிப்பீட்டுத் தொகையில் மூன்றில் ஒரு பங்கைக் குறைத்துக் கொண்டு கட்டடத்தைக் கட்டி முடிப்பதாக எழுதிப் போட்டார். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. 'டெண்டர்களை உடைத்துப் பார்த்தபோது, என் தந்தையின் 'டெண்டரே மிகக் குறைந்த தொகை. ஆகவே, அவ்வேலை என் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது. தந்தை, கட்டடவேலையை மேற்கொண்டார். தொல்லைகள் விளைந்தன. செங்கல் கொடுப்போரைக் கலைப்பார்கள்: கொத்தனாரைத் திடீரெனச் சொல்லாமல் நிற்கும்படி செய்து விடுவார்கள். தச்சுத் தொழிலாளியும் இதிலிருந்து தப்ப முடியவில்லை. இதற்கு மேலாக, மேற்பார்வையிட்ட பொறியர், ஆகாத பெண்டாட்டி கால் பட்டால் குற்றம், கைபட்டால் குற்றம் என்பதுபோல், எடுத்ததற் கெல்லாம் குறை கூறினார். அடிக்கடி கலைத்துவிட்டு, மீண்டும் அமைக்கச் சொன்னார். அத்தனை இடையூறுகளையும் தாண்டிக் கட்டடத்தை அமைத்துக் கொடுத்தார். இருந்தும் வழக்கத்திற்கும் நீண்ட காலம் சேரவேண்டிய பணத்தைக் கொடுக்காமல் காலந்தாழ்த்தினார்கள். கடைசியில் கணக்குப் பார்த்தபோது, கைப்பிடிப்புச் சில நூறுகள் மட்டுமே. ஆயிரக்கணக்கில் அல்ல என்று என்னுடைய தந்தையார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/428&oldid=787318" இலிருந்து மீள்விக்கப்பட்டது