பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51. வேலை தேடி வீண் அலைச்சல் சிவசங்கரரின் பண்பு வேலை தேடி, திருவனந்தபுரம் போகும் திட்டம் நிறைவேற வில்லை. அன்றைய நெய் யாடு பாக்கத்திற்குக் காவாந்தண்டலம் அஞ்சல் நிலையத்திலிருந்து வாரம் ஒரு முறையே அஞ்சல் வந்து சேரும். அதில் வரும் செய்தித் தாள்களை ஆவலோடு எதிர்பார்த்துக் டெப்பேன். வந்ததும், விளம்பரங்களைத் தேடிப் பார்ப்பேன், எந்த அலுவலுக்கும் ஆள் கேட்டு விளம்பரம் வரவே இல்லை. எத்தனையோ திங்கள் எதிர்பார்த்து ஏமாந்ததே மிச்சம். இப்படிச் சில திங்கள் சென்றபின், என் உறவினர் மா.அ. திருநாவுக்கரசு பி.ஈ.க்குத் திருமணம் வந்தது. மணப்பெண், சேலம் மிட்டாதார் திரு. சிவசங்கரனுடைய தம்பி, திரு இராம சுப்பிரமணியம் அவர்களின் மகள். அத்திருமணம் சேலம் அஸ்தம்பட்டியில் மணமகள் இல்லத்தில் நடந்தது. என் தந்தை அந்தத் திருமணத்திற்கு என்னை அனுப்பி வைததாா. நான் வேலூர் சென்று, மாப்பிள்ளை வீட்டாரோடு சேர்ந்துகொண்டு அவர்களுடன் சேலம் சந்திப்புக்குப் பகல் வண்டியில் பயணம் செய்தேன். o காலம் கோடைக் காலம். இருப்பினும் பயணப் பரவசத்தினால் வெய்யில் தெரியவில்லை. மாலைப்பொழுது சேலம் சென்றடைந்தோம். அங்கே, வயதிலும் செல்வத்திலும் பெரியவரான திரு. சிவசங்கரரைக் கண்டேன். வியந்தேன், ஏன்? செல்வச் செருக்கே இல்லை. அதோடு மூத்தவர் என்னும் முனைப்பும் இல்லை. பல வயது இளைய என்னோடு கலகலப்பாக அளவளாவினார். நான் பொருளியல் சிறப்புப் பட்டம் பெற்றவன் என்று அறிந்ததும் என்னை அழைத்துக்கொண்டு போய், தம்முடைய தனி நூலகத்தைக் காட்டினார். கண்டேன்; திகைத்தேன். ஏன்? பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் வெளியாகும் பொருளியல், சமூக இயல் நூல்கள் உடனுக்குடன் அவர் நூலகத்தில் சேர்ந்துள்ளன. அத்தகைய நூல்களை அப்போதைக்கப்போதே அனுப்பி வைக்கும் '4. இரண்டு மூன்று வெளிநாட்டு நூல் விற்பனையாளர் களோடு நிலையான ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/433&oldid=787330" இலிருந்து மீள்விக்கப்பட்டது