பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396 நினைவு அலைகள் இப்படி, பல பெரிய ஊர்களில் ஊராட்சி மன்றங்கள், பத்தாண்டுக்கு மேலாகச் செயல்பட்டபின் அவற்றைக் கண்காணித்து, தணிக்கை செய்து, சரியானபடி இயங்கவைக்க வேண்டுமென்னும் எண்ணம் கருக்கொண்டது; சிலகாலம் பேச்சாக இருந்த இக்கருத்து, பின்னர் செயல் உருவம் பெற்றது. மாவட்டந்தோறும் ஒரு மாவட்டப் பஞ்சாயத்து அதிகாரியை நியமிப்பது என்பது திட்டம். மாவட்ட உடல்நல அதிகாரியைப்போல, மாவட்டப் பொறி யியலாரைப்போல, மாவட்டப் பஞ்சாயத்து அதிகாரி மாவட்ட ஆட்சிக்குழுவின் ஆணையின் கீழ் செயல்பட வேண்டும். ஆனால் அந்த அதிகாரிகளை, உள்ளாட்சி மன்றங்களின் தலைமை ஆய்வாளர் (இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆப் லோகல் போர்ட்ஸ்) நியமிக்க வேண்டும். ஒரே நேரத்தில், பதினைந்து இருபது அதிகாரிகளை நியமிக்க விருப்பதால், பாதிப் பதவிகளையாவது, நேரே, பட்டதாரி இளைஞர்களுக்குக் கொடுக்கக்கூடும் என்று எங்கும் பேச்சாயிருந்தது. வேலை தேடும் படலம் அப்போது தலைமை ஆய்வாளராக இருந்தவர். திரு. தம்போ ஐ.சி.எஸ். ஆவார். அவர் யாழ்ப்பாணத்துக் கிறித்தவர்; பார்ப்பனரல்லாதார் பேரில் ஒரளவு பற்றுடையவர்: தமிழ்ப் பற்றும் உடையவர். திரு.வி. கலியாணசுந்தரனாருக்கு மிகவும் வேண்டியவர். இப்படிப்பட்ட, உறுதிப்படாத தகவல்களை வைத்துக்கொண்டு என் நல்லாசிரியர் புலவர் திரு நமச்சிவாயர் வழியாக, திரு.வி.க.வின் உதவியை நாடினேன். பரிந்துரை பெறுமளவுக்குத் தம்போ நெருக்கமானவரல்ல என்று திரு.வி.க. கூறிவிட்டார். அம்முயற்சி பலிக்காததைப்பற்றி நான் அயர்வு கொள்ளவில்லை. வேலூரில் புகழோடு விளங்கிய என் உறவினர் திரு மா.ச. துரைசாமியை அணுகினேன். என் தந்தையின்பால் கொண்டிருந்த நட்பை எண்ணி; அவர் தீவிரமாக முயற்சி செய்ய முன் வந்தார். டாக்டர் சுப்பராயனின் சுயேச்சை அமைச்சரவையில் அமைச்சராக இருந்த திரு எஸ். முத்தய்யாவின் சட்டமன்றச் செயலராக இருந்தவர். திரு மாணிக்கவேலர். அவர் எம்.ஏ., பி.எல். பட்டம் பெற்றவர்: வேலூர்க்காரர்; என் உறவினருக்கு வேண்டியவர். திரு மாணிக்கவேலர் அவ்வமயம், சென்னை சிந்தாதிரிப் பேட்டையில், சிந்தாதிரிப்பேட்டை ஆண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு அருகில் கூவத்தைப் பார்த்தாற்போல் இருந்த பங்களாவில் குடியிருந்து வநதாா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/439&oldid=787337" இலிருந்து மீள்விக்கப்பட்டது