பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவு அலைகள் 2 அன்று காற்று வீசியபடியே இருந்தது. அதனால் மேடையில் தொங்கிக் கொண்டிருந்த காகிதத் தோரணங்கள் வேகமாக ஆடியபடியே இருந்தன. முற்பகல் நிகழ்ச்சி முடிய அரைமணிநேரம் இருக்கும்போது அவற்றிலொன்று. சூடேறிய விளக்குக் கூட்டின்மேல்பட்டுத் தீப்பிடித்துக் கொண்டது. அந்தத் தீ முதலில் மேடைப் பந்தலைப் பிடித்து, காற்றின் கூட்டால் எல்லாப் பந்தலையும் விரைந்து பற்றிக் கொண்டது. மக்கள் நாலாபுறமும் அஞ்சி ஒடிச் சிதறினர். ஒரு மணி நேரத்திற்குள் எல்லாப் பந்தல்களும் சாம்பலாயின. எனினும் ஒர் உயிருக்கும் தீங்கோ, உடலுக்குக் காயமோ ஏற்படவில்லை. மேடைக்கருகில் அமர்ந்திருந்த இருநூற்றுக்கும் மேற்பட்ட நர்சரிப் பள்ளிக் குழந்தைகளை விழாத் தொண்டர்கள் பதற்றமில்லாமல் பத்திரமாக வெளியே கொண்டுபோய் விட்டுக் காப்பாற்றினார்கள். குழந்தைகளிலும் ஒருவருக்கும் காயம் ஏற்படவில்லை. மேடையின் நடுவில் விழாவுக்குத் தலைமை தாங்கிய திரு கருப்பையா மூப்பனார் அமர்ந்திருந்தார். அவருக்கு வலப்புறம் முத்தமிழ்க்காவலர் திரு. கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களும், அவர்களுக்கு வலப்புறம் பூண்டி துளசி ஐயா வாண்டையாரும், அவருக்கு வலப்புறம் ஏ.ஆர். இராமசாமித்தம்பதிகளும் வீற்றிருந்தனர். திரு மூப்பனாருக்கு இடப்பக்க இருக்கையில் நான் அமர்ந்திருந்தேன். அதற்கு அடுத்துச் சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம் அவர்கள் அமர்ந்திருந்தார். என்னுடைய இருக்கையில்தான் ம.பொ.சி அமர்ந்திருக்க வேண்டும். அவர் வேறு ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு வரக் கால தாமதமாயிற்று. அதுவரை விழாத் தலைவருக்கு அடுத்த நாற்காலியைக் காலியாக வைத்திருக்க வேண்டாமென்று என்னை உட்கார வைத்தார்கள். சிலம்புச் செல்வர் வந்தபோது அவரை உட்கார வைக்க எழுந்து இடம் கொடுத்தேன். அவரோ, என்னைப் பிடித்து அழுத்திப் பழைய இடத்திலேயே உட்கார வைத்துவிட்டு எனக்கு இடப்புறம் அமர்ந்தார். தீப்பிடித்த காகிதத் தோரணம் அறுந்து என் காலடியில் விழுந்தது. அதைக் கண்ட அவையோர் கூச்சலிட்டனர். மேடையிலிருந்து அனைவரும் வெளியேறினோம். படிக்கட்டு வழியாக இறங்கியவர்கள் சிலர். மேடையிலிருந்த படியே குதித்தவர்கள் சிலர். எனினும் ஒருவருக்கும் சிறிது காயமும் ஏற்படவில்லை. அவ்வளவு பெரிய தீ விபத்தை நான் நேரில் கண்டதில்லை. எனவே, மிகப் பெரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/44&oldid=787338" இலிருந்து மீள்விக்கப்பட்டது