பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 399 அவர் மதுரையில் வழக்கறிஞராக இருந்தவராம். அத்துறையில் போதிய பணம் சம்பாதிக்க இயலாமையால் வேலைக்குப் போக முயன்றாராம். ஏதோ பெற முயன்றுவிட்டு, கடைசியில் மாவட்டப் பஞ்சாயத்து அதிகாரி பதவியையாகிலும் பிடிப்பது என்று, பகீரத முயற்சியில் ஈடுபட்டு இருந்தாராம். அம்முயற்சியில் பகுதியே அவர் பி.டி. இராசன் இல்லத்தில் வந்து தங்குவது என்ற ரகசியத்தை நண்பர் சீனிவாசன் கண்டுபிடித்தார். எனக்காக முயன்றுகொண்டே இருந்தார். எல்லாப் பதவிகளுக்கும் ஆட்களை நியமித்த பிறகே, அவர் ஒய்ந்தார். தங்கவேலரின் முயற்சி நான் மனம் உடையவில்லை; தொடர்ந்து அலைந்தேன். என்னை அழைத்துக் கொண்டு, காஞ்சிபுரம் திரு ஏ.கே. தங்கவேலர்அலைந்தார். காஞ்சிபுரத்திலிருந்து எத்தனை முறை, தம் செலவிலேயே, என்னைச் செங்கற்பட்டிற்கு அழைத்துக் கொண்டு போனார்! தம் செலவில் அழைத்து வருவார். வீட்டுப் பணத்தைச் செலவிட்டுத் தொண்டாற்றிய பழைய நீதிக்கட்சி மரபில் வந்தவர், தங்கவேலர். அவர் 1920 இல் இருந்து என் தந்தைக்கு நண்பர் இரட்டையாட்சி முறையின்கீழ் நடந்த சென்னை மாகாணச் சட்டமன்றத் தேர்தலில் திரு ஆற்காடு இராமசாமி முதலியாருக்காகப் பாடுபட்டவர்களில் என் தந்தையும் தங்கவேலுவும் சேர்ந்தவர்கள். அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. தொடர்ந்து ஆற்காடு இராமசாமி முதலியாருக்காகவே, ஒவ்வொரு தேர்தலிலும் இருவரும் வாக்குச் சேகரிப்பதில் முனைந்திருந்தார்கள். எனவே, நட்புப் பெருகிற்று. நட்பின் காரணமாகப் பலமுறை, என்னைச் செங்கற்பட்டுமே. வேதாசலத்திடம் அழைத்துச் சென்று உதவி கோரினார். சிலவேளை, சென்னைக்கே அழைத்துப்போய், திரு ஆற்காடு இராமசாமியிடம் அவர் உதவி கோரியதும் உண்டு. எதுவும் பலிக்கவில்லை. காலம் ஒடிற்று; சோர்வு மிகுந்தது; வெறுப்பு வளர்ந்தது. பொறுப்பாகப் படித்துப் பட்டம் பெற்றவர்களுக்கும் வேலை கொடுக்க இயலாத முறையின் மேல் எரிச்சல் மட்டுமா, வெறுப்பும் பொங்கிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/442&oldid=787341" இலிருந்து மீள்விக்கப்பட்டது