பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 401 வேலை இல்லாத் திண்டாட்டத்தை ஒழித்துவிட்ட சோவியத் நாட்டின் மேல் கவனமும், ஒழுங்காகப் படித்து, நன்றாகத் தேர்ச்சி பெற்று, பணிவோடு அலுவல் பார்க்கக் காத்திருக்கும் பல்லாயிரக்கணக் கானவர்களைத் திண்டாடவிட்டு வேடிக்கைபார்க்கும் நம் பொருளியல் முறைமேல் கசப்பும் ஏற்பட்டன. அப்படிப் பாதிக்கப்பட்டோரில் நானும் ஒருவன். பொருளியல் பாடத்தில் சமதர்ம, பொதுஉடைமைக் கோட் பாடுகளைப் பற்றிக் கற்றபோது, அது வெறும் அறிவுபூர்வமானதாகவே நின்றுவிட்டது. ஆனால், வேலையில்லாது தவித்தபோது சோவியத் சமதர்மமுறை பற்றிய, என் சிந்தனை ஆழமாயிற்று. வேலையின்மையும் வாட்டமும் உள்ள காலங்களிலும் இடங்களிலும் புரட்சிச் சிந்தனை எளிதாகப் பிறக்கும்; பொதுஉடைமைக் கொள்கை, பஞ்சில் தீப்பிடிப்பதுபோல் பற்றிக் கொள்ளும். இதைப் பட்டறிவிலிருந்து சொல்லுகிறேன். நான் வேலையில்லாது திண்டாடியபோது, தமிழ்நாட்டில் சமதர்மக் கோட்பாடு காட்டுத்தீபோல் பரவிக் கொண்டிருந்தது. ஆங்கில ஆட்சியோ அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தது. சமதர்ம இயக்கமும் பெரியாரும் தமிழ்நாட்டில் அன்று சமதர்மக் கோட்பாடு பரவுவதற்கு முதற் காரன மாக விளங்கியவர் எவர்? தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி ஆவார். அவர் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்திரண்டாம் ஆண்டு நவம்பர்த் திங்களில் மேனாட்டுச் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பினார். அப்பயணத்தில் அதிக காலத்தைச் சோவியத் நாட்டில் செலவிட்டார். அந்நாட்டின் கல்வி நிலையங்கள், அரசின் விவசாயப் பண்ணைகள், தொழிற் சாலைகள், நூலகங்கள், கலையரங்குகள் ஆகியவற்றை நேரில் பார்த்துத் தெரிந்து கொண்டார். மக்கள் இனம் சமத்துவமாக, கவலையற்று நல்வாழ்வு வாழ்வதற்கு, "மதர்ம முறையே ஏற்றது என்னும் நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொண்டு பெரியார் ஈ.வெ.ராமசாமி தாயகம் திரும்பினார். பிறகு, இந்தியப் பொதுஉடைமை வாதிகளில் முன்னோடியாகிய சிங்காரவேலரைக் கலந்து பேசினார். ஈரோட்டில் 1932 டிசம்பரில், சுயமரியாதை ஊழியர் மாநாட்டைக் கூட்டினார். இரண்டு நாள்கள் கலந்துரையாடிய பின், சுயமரியாதை 'தர்மத்திட்டம் ஒன்றைத் திட்டினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/444&oldid=787343" இலிருந்து மீள்விக்கப்பட்டது