பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406 நினைவு அலைகள் ஆங்கில ஆட்சி விழித்துக்கொண்டது 'சுற்றந்தழால் நல்லியல்பு. சுற்றத்தை மட்டுமே அலுவல்களில் நுழைய விடுவது' 'தீய இயல்பு. பால் நஞ்சாகிவிடுவதுண்டு. அதுபோல, மேற்கூறிய நல்லியல்பு நஞ்சாகிவிட்டது. தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே எல்லாம் என்றாயிற்று. எடுத்துக்காட்டு ஒன்று. நெல்லூர் மாவட்டத்தில், மாவட்டத் தண்டல் நாயகம் அலுவலகத்தில் ஒருவர் செரிஷ்டாதார். ஆனார். அது ஒட்டகத்திற்கு இடம் கொடுத்ததைப் போல் ஆகிவிட்டது. சில ஆண்டுகளில் நெல்லூர் மாவட்டம் முழுவதும் வருவாய்த் துறையில் நாற்பத்துமூன்று கேந்திரமான இடங்களில் தமது நெருங்கிய உறவினர்களை உட்கார வைத்துவிட்டார். அவர்கள் ஒருவருக்கு ஒருவர், கண்ணுங்காதுமாக இருந்தார்கள். அவர்கள் தயவில்லாமல் ஒன்றும் நடவாது என்னும் நிலை உருவாகிவிட்டது. ஆங்கில நிர்வாகிகள் பெயரோடு நிறைவு கொள்ள நேர்ந்தது. இதுவே பல துறைகளிலும். சென்னை மாகாண வருவாய்த்துறை விழிப்படைந்தது. மாவட்டத்தின் பல பிரிவினரும் அலுவலர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்று, பொதுவான சுற்றறிக்கை விட்டது. பலன் இல்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு அரை ஆண்டுக்கு ஒரு முறை, நியமனப்பட்டியலை (சாதிகளைக் குறிப்பிட்டு) அனுப்பும்படி சுற்றறிக்கை விட்டது. பயன் இல்லை. நிலையான பதவிகளிலும் தற்காலிகாக ஆட்களை நியமிக்கும் குறுக்கு வழியில் புகுந்தனர் கீழ்மட்ட அதிகாரிகள் நீதிக்கட்சியின் ஆட்சி இதற்கிடையில் 1917ஆம் ஆண்டு நீதிக்கட்சி தோன்றியது. சாதிகள் செறிந்த நாட்டில், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் பதவிகளும் ஒதுக்கப்பட வேண்டுமென்பது அதன் இலட்சியம். 1920திலும் 1923றிலும் நடந்த பொதுத் தேர்தல்களில் நீதிக்கட்சி பெரும்பான்மை இடங்களைப் பிடித்தது. அக்கட்சியின் அமைச்சரவை இருமுறை சென்னை மாநிலத்தை ஆண்டது. தொடக்கக் கல்விச் சட்டம், இந்து அறநிலையச் சட்டம் போன்ற முற்போக்குச் சட்டங்களை உருவாக்கிய நீதிக்கட்சி, வகுப்புரிமைக் கொள்கையை முழுமையாகச் செயல்படுத்த இயலவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/449&oldid=787348" இலிருந்து மீள்விக்கப்பட்டது