பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 407 நீதிக்கட்சிக்குப் பிறகு, ஆட்சிக்கு வந்தது, டாக்டர் சுப்பராயன் அமைச்சரவை. அவருடைய தலைமையில் அமைச்சர்களாக இருந்த அரங்கநாதரும், ஆரோக்கியசாமியும் விலகிவிடவும், திரு எஸ். முத்தய்யாவும், திரு சேது ரத்தினமும் அமைச்சர்களானார்கள். இந்த அமைச்சரவை அரசு அலுவல்களுக்கான வகுப்பு வாரி பிரதிநிதித்துவ ஆணையைப் பிறப்பித்தது. பன்னிரண்டு இடங்களில் இரண்டு இடங்கள் பார்ப்பனருக்கு, ஒர் இடம் முஸ்லீம்களுக்கு, இப்படியே கிறுத்தவர்களுக்கு, ஆங்கிலோ இந்தியருக்கு, தாழ்த்தப்பட்டோருக்கு, ஆறு இடங்கள் பார்ப்பனரல்லாதாருக்கு என்று பல பிரிவினருக்கும் பங்கு போட்டுக் கொடுக்க வேண்டும் என்பது ஆணை. மேற்கூறிய ஆணைக்கு முதல் காரணமும் பெருங்காரணமும் திரு எஸ். முத்தய்யா ஆவார். எனவே, பெரியார் ஈ.வெ.ரா. அவரைப் போற்றினார். அடுத்த ஒராண்டு காலத்தில், தமிழர் வீடுகளில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு முத்தய்யா என்றே பெயர் வைக்கச் சொன்னார். நன்றி கொன்ற தமிழர் தமிழர்களுக்கு எத்தனை நன்மை செய்தும் பயனில்லை என்பது வரலாற்றின் கசப்பான முடிவு. ஆயிரம் பெருன்மைகளைச் செய்தவரையே, அவர் காசளவு மதிப்பே உள்ள உதவியைச் செய்யத் தவறும்போது முதுகில் குத்துபவன் தமிழனே. இந்நிலைக்கு ஆளானார் திரு முத்தய்யா. 'எல்லாமே நாங்களாக இருக்க வாய்ப்பிருந்ததைக் கெடுத்து விட்டாரே முதலியார் என்று மேல்சாதிக்காரர்கள் கொதித்துப் பொங்கியதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். ■ கால் வைக்க இடம் கிடைக்காமல் திண்டாடிய, பார்ப்பனரல்லாதார் பாதி இடம் ஒதுக்கிய திரு முத்தய்யாவை உச்சிமேல் வைத்துப் போற்றியிருக்க வேண்டும். இரண்டும் செய்யவில்லை; மாறாக, அடுத்து வந்த பொதுத் தேர்தலில், தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். பார்ப்பனர்களுக்கு மூன்று இடம் ஒதுக்குவதற்குப் பதில் பதினாறு இடம் ஒதுக்கிவிட்டார். என்று புறங்கூறித் தோற்கடித்தார்கள். இதிலும் வதனை என்ன தெரியுமா? முத்தய்யா ஆணையாக்கியது நீதிக் கட்சிக் கொள்கையை! அக்கொள்கைக்காகப் பல்லாண்டு பாடுபட்ட, L/ Gl, 'ர்ப்பனரல்லாதார்க்குக் கைகொடுத்து உதவிய நீதிக்கட்சித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/450&oldid=787350" இலிருந்து மீள்விக்கப்பட்டது