பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெ. து. சுந்தரவடிவேலு 411 மேற்கூறிய இரண்டின் இயற்கையான விளைவாக, கீழ்வரும் மூன்றாம் முடிவு எடுக்கப்பட்டது. 'வருணாசிரமத்திலும் கடவுள் செயல் என்பதிலும் நம்பிக்கை கொண்டிருக்கிற யாராலும் மக்களுக்குச் சமத்துவமும் விடுதலையும் அடையும்படி செய்ய முடியாது என்று இந்த மாநாடு உறுதியாகச் சொல்லுகிறது.' வகுப்புரிமை கோரும் இயக்கமாக முளைத்த தன்மான இயக்கம், சாதி ஒழிப்பு இயக்கமாக வளர்ந்து, சாதிகளைத் தாங்கிக் கொண்டிருக்கும் சமயக் கொள்கைகளை வேரறுக்கும் வெள்ளமாகப் பெருகி, சமதர்ம உணர்வை, சாதாரண மக்களிடை பரப்பும் புரட்சி இயக்கமாக உருப்பெற்றது. பெரியாருக்குச் சோவியத் அரசின் அழைப்பு இதற்குக் காரணமான பெரியாரின் மேல், பிற நாடுகளின் முற்போக்காளர், தீவிரவாதிகள் முதலியோரின் நாட்டம் பாய்ந்தது. பெரியார், சோவியத் நாட்டை வந்து பார்க்கும்படி அழைக்கப்பட்டார். இந்திய ஆதிக்க சக்திகள், பெரியாரை ஆங்கிலேயரின் அடிவருடி' என்று இடைவிடாது துாற்றியபோதிலும், ஆங்கில ஆட்சி பெரியாரை எடைபோட்டு வைத்திருந்தது. பெரியார், இணையற்ற சுய சிந்தனையாளர்; புரட்சிச் சிந்தனையாளர்; அவர் மண்டைச்சுரப்பை, மிரட்டி அடைக்க முடியாது; பணத்தைக் கொட்டி அடைக்க முடியாது; பதவி மோகினியால் மயக்க முடியாது. அவர் கருத்துகள், கட்டுக்கடங்காத பிரளயம். எனவே, பெரியாரை, சோவியத் நாட்டைப் பார்த்துவிட்டு வரவிட்டால், புரட்சிப் பயிரைப் பரவலாக, வளர்த்துவிடக் கூடுமென்று அஞ்சியது, அன்றைய ஆங்கில ஆட்சி. எனவே, சோவியத் நாடு செல்ல, அனுமதிக்கவில்லை. வேறு பல அய்ரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளுக்குச் செல்ல மட்டுமே 'பாஸ்போர்ட் வழங்கிற்று. பெரியார் ஈ.வெ. ராமசாமி, திரு எஸ். இராமநாதனோடு, 1931 ஆம் ஆண்டு இறுதியில் சென்னையில் கப்பல் ஏறி, வெளிநாடுகளுக்குச் வசன்றார். எகிப்து, கிரீசு, இத்தாலி, ஸ்பெயின், போர்த்துக்கல், பிரான்சு, பிரிட்டன், ஜெர்மனி, துருக்கி ஆகிய நாடுகளைச் சுற்றிப் பார்த்தார்.

சோவியத் நாட்டுக்கும் சென்றார்: ஒராண்டு உலகப் ā ததல అక్షా மாதங்களுக்குமேல், சோவியத் நாட்டில்

Pயப்பயணஞ் செய்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/454&oldid=787354" இலிருந்து மீள்விக்கப்பட்டது