பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 413 இருநாள் கருத்துப் பரிமாற்றத்திற்குப்பின் தன்மான இயக்கத்தின் அரசியல் கிளையாகச் சுயமரியாதைச் சமதர்மக் கட்சியை ஏற்படுத்து வதென்று முடிவு செய்யப்பட்டது. அக்கட்சியின் குறிக்கோளும் திட்டங்களும் முடிவு செய்யப்பட்டன. அவை வருமாறு: 1. பிரிட்டிஷ் முதலிய எந்தவித முதலாளித் தன்மைகொண்ட ஆட்சியிலிருந்தும் இந்தியாவைப் பூரண விடுதலை அடையச் செய்வது. 2. சுதேச சமஸ்தானங்கள் என்பவைகளை யெல்லாம் மாற்றி இந்தியா முழுவதையும் தொழிலாளிகள், குடியானவர்கள், சரீர வேலைக்காரர்கள் என்பவர்களுடைய நேரடியான ஆட்சிக்குக் கொண்டு வருவது. ஆட்சிமுறை பற்றி மேற்கூறிய இரு முடிவுகளையும் எடுத்ததன்மான இயக்கத்தவர்கள், சொத்துஉடைமை பற்றி எடுத்த முடிவுகளைப் பார்ப்போம். எல்லாத் தொழிற்சாலைகளையும் இரயில் வேக்களையும் பாங்கிகளையும் கப்பல், படகு, நீர்வழிப் போக்குவரத்து சாதனங்களையும் பொதுமக்களுக்கு உரிமையாக்குவது. எந்த விதமான பிரதிப் பிரயோசனமும் கொடுபடாமல் தேசத்தில் உள்ள எல்லா விவசாய நிலங்களையும காடுகளையும் மற்றத் தாவர சொத்துகளையும் பொதுமக்களுக்கு உரிமையாக்குவது. குடியானவர்களும் தொழிலாளிகளும் லேவாதேவிக்காரர்களிடம் பட்டிருக்கும் கடன்களையெல்லாம் செல்லுபடியற்றதாக ஆக்கி விடுவது. அடிமை ஒப்பந்தங்களை ரத்து செய்துவிடுவது. தேசத்தின் பேரால் கொடுக்கப்படவேண்டிய எல்லாக் கடன்களையும் முழுமையாக ரத்து செய்வது. தொழில் செய்பவர்கள் ஏழு மணி நேரத்திற்குமேல் வேலை செய்யக் கூடாது என்பதுடன் அவர்களுடைய வாழ்க்கை நிலை உயர்த்தப் படுவது. தொழிலாளிகளுக்குக் கூலியை உயர்த்தி அவர்களது * வாழ்க்கைக்கு வேண்டிய சவுகரியங்களையும் இலவச நூல் நிலையங்கள் முதலிய வசதிகளையும் ஏற்படுத்துவது; தொழில் இல்லாமல் இருக்கின்றவர்களை அரசே பராமரிக்கும்படி செய்வது. இம்முடிவுகள், பரந்த நில அதிர்ச்சிபோல் செயல்பட்டன. 'சிற்சாலைகள், வங்கிகள், நீர்வழிப் போக்குவரத்துச் சாதனங்கள்: இந்தியர்கள் கைகளில் இருந்ததைவிட வெள்ளையர்கள் இடமே '-ங்கு அதிகம் இருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/456&oldid=787356" இலிருந்து மீள்விக்கப்பட்டது