பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 4.17 பெரிய விலை கொடுக்காமல், பெரிய மாற்றங்களை உருவாக்க இயலாது. சொல்நயம், எழுத்தழகு ஆகியன சுவைக்கு ஏற்றவை; சூடேற்றத் தகுதியற்றவை. எனவே பரவலாகத் தெளிவூட்ட வேண்டும். பெற்ற தெளிவு குளிர்ந்து போகாதிருக்க வேண்டும். தெளிவும் சூடும் பரந்த தன்னல மறுப்பாகக் காய்த்து, தலைகீழ் மாற்றக் கனிகளாக வேண்டும். இத்தகைய எண்ண மோதலில், வேலையில்லாத் திண்டாட்டப் பருவத்தைக் கழித்தேன். 56. பத்திரிகையாளனானேன் திராவிடன் இதழில் சேர முயன்றேன் அலைச்சலிலும், உள்ள உளைச்சலிலும் ஏறத்தாழ இருபது திங்கள் நகர்ந்தன. அரசுச் சார்புடைய பதவி ஏதும் காலியாகும் வாய்ப்பில்லை எனத் தோன்றியது. அந்நிலையில், நீதிக்கட்சி நடத்தி வந்த 'திராவிடன் இதழின் ஆசிரியர் குழுவில் சேர முயன்றேன். அதற்காகப் பலமுறை திரு பி.டி. இராசனை அணுகினேன். திரு எஸ்.எஸ். அருணகிரிநாதரைக் கொண்டு திண்டுக்கல் சுப் பிரமணியத்தின் உதவியைப் பலமுறை நாடினேன். ஒன்றும் பலிக்கவில்லை. 'என் பெயரைச் சொன்னாலே, வருவதும் ஒடிப்போகும் என்று பலரும் பேசியது என் காதுகளில் வீழ்ந்தது. பண்புடை வேந்தர் மட்டுமல்லாது, மற்றக் குடிமக்களும் செவிகைக்கும் சொல் பொறுக்க வேண்டுமென்பதைப் புரிந்து கொண்டேன். மாற்ற முடியாதவற்றைப் பொறுத்துக் கொள்ளும் முதற் பாடத்தை அப்போதே கற்றேன். அப்பாடம் பிற்காலத்தில் என் வாழ்க்கைக்குப் பெரிதும் பயன்பட்டது. நான் வேலையின்றி அலைந்துகொண்டிருந்த காலத்தில், சில எதிர்பாராத நன்மைகள் விளைந்தன. அவற்றில் ஒன்று புதிய நண்பர் ஒருவர் கிடைத்தது. அவர் எவர்? திரு காஞ்சி கல்யாணசுந்தரம் என்பவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/460&oldid=787361" இலிருந்து மீள்விக்கப்பட்டது