பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422 - நினைவு அலைகள் ஈரோட்டில் நடந்த இரண்டாவது மாகாண சுயமரியாதை மாநாட்டில் நான் பெரியாருக்கு அறிமுகம் செய்யப்பட்டேன். பந்தியில் இருந்தபடியே சில மணித்துளிகள் அவரோடு பேசியது தவிர, அவரோடு நான் பழகியதில்லை. இருப்பினும், என்னை அ றிந்தவர் எவரோ சொல்லக் கேட்டு, என்னைத் தமது அலுவலகத்திற்குப் பெரியார் அழைத்திருக்கிறார். அப்படிச் சேர்ந்திருந்தால், Sதாக்குப் பிடித்திருப்பேனா? வளர்ந்து இருப்பேனா? வெட்டிக் கற்பனைகள்தானே! தந்தை பெரியாரின் அழை. ப்பினை ஏற்றுக் கொள்ளாமல் டாக்டர் வரதராசுலுவின் 'தமிழ்நாடு இதழிலேயே தொடர்ந்து பணியாற்றினேன். தமிழ்நாடு நாளிதழ் தமிழ்நாடு தொடக்கத்தில் Gh/ TДJ இதழாக வெளிவந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு நாளிதழாயிற்று. இது தேசிய காங்கிரசுக்கு ஆதரவாக இருந்து அரும்பணியாற்றியது. இதன் நிறுவனரும் ஆசிரியருமாகிய டாக்டர் வரதராசுலு சேரன்மாதேவி குருகுலப் போராட்டத்தில் முன்னணியிலிருந்தவர்களில் ஒருவர். அக்குருகுலத் தில் சமபந்திக் கல்விமுறை வேண்டுமென்று போராடியதன் விளைவாக, பிராமணர்களுடைய வெறுப்பைத் தேடிக் கொண்டார். அது ஒரளவு தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பாதித்திருந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு தினமணி நாளிதழ் வெளிவரத் தொடங்கியது. தமிழ்நாடு இதழுக்குப் போட் டியை வளர்த்தது. எத்தனை அருமையான வாய்ப்பு அக்கால நாளிதழ்களில் பணிபுரிதல் இந்நூற்றாண்டின் இருபதுகளிலும் முப்பதுகளிலும் பொது வாழ்க்கையில் சில்லறைத்தனம் குறைவு. அப்போது வேழமும் வேழமும் போராடும் நிலை. அரசியல் மோதல்கள் என்பவை, கொள்கை மோதல்களாக, கருத்துகளுக்குள் குத்துச்சண்டைகளாக இருக்கும். சிற்சிலபோது எவரோஒருவர், எழுத்திலோ, பேச்சிலோ சில்லரைத் தனமாகப் பேசி, தலைவர்களை மகிழ்வித்து வந்ததை இல்லையென்று சொல்லிவிட முடியாது. இருப்பினும் அத்தகையோருக்கு அந்தந்தக் கட்சிகளில் கூட மதிப்பிராது. அவர்களுடைய தலைவர்கள், அவர்களுடைய மட்டரகமான பேச்சுக்களைக் கண்டிப்பார்கள். செய்தித்தாள்களுக்கு வரும் செய்திகள், பெரிதும் கொள்கைகளின் அடிப்படையில் இருந்த காலம். விரைவான விடுதலை, பாதுகாப்போடு கூடிய படிப் படி உரிமை வழங்குதல், சமத்துவத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/465&oldid=787366" இலிருந்து மீள்விக்கப்பட்டது