பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 423 மாண்பு, பொது உடைமையின் சிறப்பு, ஆகியவற்றைப் பற்றி அறிந்தவர்களின் ஆதரவுகளும் மறுப்புகளும் நிறைய வந்து கொண்டிருந்த காலம். எனவே, மொழிபெயர்ப்பிற்காக என்னிடம் வந்த நீண்ட பேச்சுகளும் கட்டுரைகளும் எனக்குச் சலிப்பூட்டவில்லை; மாறாக அறிவினைக் கூர்மைப்படுத்தின. இதைப் பார்த்தபோது எழுத்துலகிலேயே இருந்துவிடலாம் என்று எண்ணினேன். வருவாயைப் பற்றிச் சிந்தனை எழுந்தது. தமிழ்நாடு இதழின் ஆசிரியர் திரு. வேங்கடராசுலுக்கு அப்போது மாதச் சம்பளம் இருநூறு ரூபாய். நாளை ஒரு நாள் ஏதாவதொரு நாள் இதழின் ஆசிரியராக நான் உயரலாமே. அப்போது இருநூறு ரூபாய் சம்பாதிக்கலாம். அதற்கு மேலே சம்பளம் கொடுக்கும் வேலை அந்த நாளில் கிடைக்கும் என்பது உறுதியல்ல. ■ இருக்கிற வேலையோ அறிவோடு தொடர்பு உடையதாக இருக்கிறது. பொதுமக்களுக்கு அறிவைத் தந்து, ஆய்ந்து பார்க்கும் போக்கை வளர்ப்பதற்கு, இத்தொழில் பயன்படலாம். உள்ளது சிறத்தலே இயற்கை நியதி; அந்த நியதிக்குக் கட்டுப்பட்டதே பத்திரிகை உலகம். ஆகவே, உயர் எண்ணங்கள் பாய்ச்சும் வாய்க்கால்களாக இதழ்கள் பயன்படலாம். இவ்வேலையிலேயே தொடர்ந்திருந்தால், எனக்கும் அந்த நல்ல தொண்டில் பங்கு கிடைக்கும். ஆகவே, தமிழ்நாடு நாளிதழில் தொடர்ந்து இருப்போம். இப்படி எனக்குள் தீர்மானமாக முடிவு செய்துகொண்டேன். சம்பளம் போதுமா? அம்முடிவிற்கு வருமுன், முப்பத்து ஐந்து ரூபாய் சம்பளம் கட்டுபடியாகுமா என்பதையும் சிந்தித்துப் ப்ார்த்தேன். என்னுடைய வாழ்க்கையில் என்றுமே படாடோபம் புகுந்ததில்லை; ஆடம்பரமான பட்டுப் பீதாம்பரத்தின்மேல் பற்றுக் கொண்டதில்லை. சிறுவனாகக் காதில் கடுக்கண் போட்டுக் கொண்டிருந்தேன். அதுவும் பிடிக்கவில்லை. இரண்டொரு ஆண்டில் கழற்றிக் கொடுத்துவிட்டேன். மோதிரம் என்னைக் கவர்ந்தது இல்லை. சிகரெட்டு, சினிமா, வெற்றிலைபாக்கு, பொடி ஆகிய '9க்கங்களும் என்னிடம் கிடையா. அந்த அளவுக்குச் செலவும் குறைவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/466&oldid=787367" இலிருந்து மீள்விக்கப்பட்டது