பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424 நினைவு அலைகள் என் பெற்றோரும் என் வருவாயை எதிர்பார்க்கும் நிலையில் இல்லை. சொத்துச் சேர்க்க ஆசையுமில்லை; நடைமுறைச் செலவுக்கு? உணவுக்கும் உடைக்கும் உறையுளுக்குந்தானே. உணவுக்கு எவ்வளவு வேண்டும்? கணக்கிட்டுப் பார்த்தேன். சென்னைச் சட்டக் கல்லூரிக்கு எதிரில் மாடர்ன் கபே தொடங்கிய புதிது. அன்று அது பலரும் தேடிப்போன புகழ்பெற்ற சிற்றுண்டிச்சாலை. ஒரு கண்ணாடிக் குவளைக் காப்பி ஒரனா. அரைக்குவளையே பெரும்பாலோர் கேட்பது. அதன் விலை முக்கால் அனா. பெயர்தான் அரைக்குவளை, முக்கால் குவளை கிடைக்கும். தோசை அரையனா. இரண்டு இட்லிகள் அரையனா. காலைச் சிற்றுண்டிக்கு இரண்டனா போதும்; மாலைச் சிற்றுண்டிக்கும் அவ்வளவு போதும். பகல் இரவு உணவுகளுக்கு? அதே மாடர்ன் கபே ', 'பிராட்வே தொடக்கத்தில் சாப்பாட்டுக் கடையும் நடத்தி வந்தது. நல்ல சுவையான மரக்கறி உணவு கிடைக்கும். அதில், பகலில் சாம்பாரும் மோர்க்குழம்பும் இருக்கும். இரவில் சாம்பாரோ, பொரித்த குழம்போ; அதோடு வற்றல் குழம்பு உண்டு. பருப்பு, பச்சடி, ஒரு பொரியல், ஒரு கூட்டு, ஒரு வறுவல், அப்பளம், ரசம், கோப்பைத் தயிர், மோர், ஊறுகாய் இத்தனையும் தாராளமாகப் பரிமாறுவார்கள். பதார்த்தமோ, சோறோ எவ்வளவு கேட்டாலும் போடுவார்கள். தயிர் ஒன்றுக்குத்தான் அளவு. இந்தச் சாப்பாட்டுக்குக் கட்டணம் என்ன தெரியுமா? நாலனாதான்! ஆனால் பத்து ரூபாய்க்கு அறுபது சீட்டுகள்; அவற்றைப் பயன்படுத்த இரண்டு திங்கள் கெடு உண்டு. உணவு நன்றாயிருந்ததைப் போன்றே கவனிப்பும் கனிவாக இருந்தது. ஆகவே, பதினேழரை ரூபாய்களே, சாப்பாட்டுச் செலவிற்குத் தேவை. உடைக்கு மாணவப் பருவத்தில் ஆலைத்துணி உடுத்துவதிை விட்டு, கதர்த்துணிக்கு மாறினேன். கதர் வேட்டி எனக்கு எளிதில் கிழிந்துவிடும். எனவே வேலையில்லாத பருவத்தில் மாற்றுத்துணி தேடினேன். ஆலைத் துணிக்குத் திரும்ப மனம் ஒப்பவில்லை. உறுதிக்குப் பெயர் பெற்ற ஈரோட்டுக் கதரை தேர்ந்தெடுத்தேன். அவ்வகையில், நான்குமுழம் வேட்டி பதினைந்து அனா, ஜிப்பா துணி கஜம் ஐந்தனா. ஜிப்பாவுக்கு மூன்று முழம் தேவை. அதற்கு?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/467&oldid=787368" இலிருந்து மீள்விக்கப்பட்டது