பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ து. சுந்தரவடிவேலு 425 - -- தையற்கூலி, அய்ந்தனா. ஆக, ஒன்றேகால் ரூபாயில் ஒரு கதர் ஜிப்பா கிடைக்கும். இதற்குமேல், எனக்கு நேர் இளைய தம்பி சிவானந்தம் இளமையில் வாணிகத்தில் மோகங் கொண்டு விட்டான். எனவே, படிப்பைப் பள்ளியிறுதி வகுப்போடு நிறுத்திக்கொண்டான். முதலில் கொத்த வால் சாவடியில் எங்கள் உறவினர் மண்டியிலும், பிறகு எங்கள் இனிய நண்பர் திரு நாராயணசாமிச் செட்டியார் மண்டியிலும் சேர்ந்து அலுவல் பார்த்தான். இரு போதும் மண்டி மாடியில், என் தம்பிக்குத் தங்குமிடம் தந்திருந்தார்கள். நான் அங்குத் தங்கியிருந்தேன். ஆகவே, அந்நிலையில், தமிழ்நாடு துணை ஆசிரியராகத் தொடர்வது என்னை எவ்வித நெருக்கடியிலும் தள்ளாது என்று முடிவு செய்தேன். செய்தித்துறையில் இருந்து, எழுத்துவன்மையால், தமிழர்களை விழிப்படையச் செய்து பெரிய அரசியல், சமூகவியல் பொருளியல் புரட்சிக்குக் காரணமாகிறவர்களில் ஒருவனாக இருக்கப் போகிறோ மென்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்தேன். கற்பனை வானில் மிதந்து கொண்டிருந்தேன். கவலையின்றிக் காலம் ஒடிற்று. 57. அண்ணாவுடன் முதல் சந்திப்பு காஞ்சி கல்யாணசுந்தரம் ஒருநாள் என்னிடம் வந்தார். ஏதேதோ பேசினார். நேரம் போகவில்லை. தம்முடைய நண்பர் ஒருவர் தங்கசாலைக்கு அடுத்த பகுதியில் குடியிருப்பதாகவும், அவர் காஞ்சிபுரத்தார் என்றும், நல்ல கெட்டிக்காரர் என்றும் சொன்னார். அவரைப் பார்க்கப் போகலாமென்று அழைத்தார். அக்காலத்தில், எனக்குப் புதிய புதிய நண்பர்களை ஏற்படுத்திக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் உண்டு. எனவே, நான் புதிய நண்பரைக் *ானச் செல்வதற்கு உடன்பட்டேன். போகும் வழியில் அந்த இளைஞரைப் பற்றிச் சொல்லிக் கொண்டு பிந்தார். அவர் சின்னக்காஞ்சிபுரத்தார்; காஞ்சிபுரத்தில் பச்சையப்பன் -யர்நிலைப்பள்ளியில் படித்தார். அவர் சூடு அறிவு உடையவர்: நிறையப் படிப்பவர். பிறகு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து படித்தார். I—Ј тL__ கால்களுக்கு மேலே ஏராளமான நூல்களைப் படித்திருக்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/468&oldid=787369" இலிருந்து மீள்விக்கப்பட்டது