பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 5 விட்டுவிட வேண்டாம். இன்னொரு பெண்ணை நம்ம சாதியில் கட்டிக் கொள்ளத் தயங்கவும் வேண்டாம்' என்று சித்தி மரணப் படுக்கையில் கிடந்தபடியே வேண்டினார்களே! 'நீ படிப்பதற்காகக் காஞ்சீபுரம் வந்து, குடித்தனம் கட்டி, உதவிய சித்தியின் நன்றியை மறந்து, மறுத்துவிட்டாயே! நன்றி காட்டுவதை விடவா பெரிது, கொள்கைப் பிடிப்பு? தொலையட்டும். கலப்பு மணம் செய்து கொண்ட முற்போக்காளன் என்னும் வேடத்தின் மறைவிலே, உன் சாதிப் பையன்களாகப் பார்த்து உதவியிருக்கக் கூடாதா? உனக்குத்தான் தெரியவில்லை. மற்றவர் களைப் பார்த்தாவது கற்றுக் கொண்டிருக்கலாமே! ஆவதறிவார்.அறிவுடையார் என்பதைப் படித்தாயே! பலன் என்ன? உன்னைப் போலக் கலப்பு மணம் செய்து கொண்டவர்களில் எத்தனை பேர் நழுவுவதுதெரியாமல் நழுவி, தத்தம் சாதிகளின் காவலர்களாகி விட்டார்கள் இரு சாதிச் செல்வாக்கையும் கொண்டு உயர்ந்து விட்டார்கள்! எங்கோ இருந்த, முன்பின் தெரியாத, முத்தனையும் முனியனையும் தேடித் தேடி உதவி செய்தாயே! புத்திசாலியாக இருந்திருந்தால், இருபது ஆண்டுகளுக்கு முன்பே,'நம் முதலியார் சாதிப் பையன்களுக்குத் தாராளமாக உதவுங்கள். துணிந்து செய்யுங்கள். நம் சாதி கைவிட்டு விடாது' என்று உன்பால் நல்லெண்ணம் உடைய, உன்னிலும் பெரிய பதவியில் இருந்த முதலியார் சொன்னபோதாவது, மெல்லத் திசை மாறியிருப்பாய். அடுத்தும் சிவப்பு விளக்குக் காட்டினார்களே! வடிவேலு செய்த கெடுதி நமக்குத் தொல்லையாக வந்து விடிந்தது. அவன் ஊர் ஊராகச் சென்று, ஏழைப் பிள்ளைகளுக்குச் சோறுபோட வைத்தாலும் வைத்தான், இப்ப ஆடுமாடு மேய்க்கச் பசங்கள் கிடைக்கவில்லை. 'நம் ஊரும் அப்படியாகிவிட்டது. எங்கள் மாட்டை மேய்த்த 'பயனும் நின்றுவிட்டான். ஏண்டா என்றால் படிக்கப் போகிறேன் என்றான். 'அதிலென்ன பலன், தொடர்ந்து மாடு மேய். நாலு மரக்காலோடு 'லும் ஒரு மரக்கால் நெல் போட்டுத் தருகிறேன், என்று சொல்லிப் பார்த்தேன். முடியவே முடியாது என்றான். அந்தப் பயல்களுக்குப் புத்தி இப்ப வராது. நம்ம பிள்ளையே நமக்குக் கொள்ளிக் கட்டையான பிறகு ஊரைக் குற்றஞ் சொல்ல என்ன வாய் இருக்கிறது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/47&oldid=787371" இலிருந்து மீள்விக்கப்பட்டது