பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 429 அடுத்த நாள் காலை, நான் தமிழ்நாடு அலுவலகத்தில் இருந்தபோது, ஒருவர் என்னைத் தேடி வந்தார். அந்நூலைக் கொண்டுவந்தார். அண்ணா இந்தப் புத்தகத்தைக் கொடுத்துவிட்டு வரச் சொன்னார். அதை முழுவதும் படித்துவிட்டார். நன்றாக இருப்பதாகச் சொல்லச் சொன்னார் என்று சொல்லிவிட்டுப் போனார். நான் மகிழ்ந்தேன். இப்படி ஏற்பட்ட எங்கள் தொடர்பு காலவோட்டத்தில் நட்பாகக் காய்த்து, தோழமையாகக் கனிந்தது. இக்கணிவைப்பற்றிப் பின்னர் உரிய இடங்களில் குறிப்பிடுகிறேன். 58. பதவி போயிற்று மனக்கோட்டை சரிந்தது பத்திரிகை உலகில் தொண்டனாக விளங்கப் போகிறேனென்று மனக்கோட்டை கட்டியது சில திங்களில் மணல் வீடாகியது. ஒரு நாள் டாக்டர் வரதராசுலு என்னை அழைத்தார். அது 1935 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் இருபதாம் நாள். என்னடைய எந்த மொழிபெயர்ப்பில் குறை காணப்போகிறாரோ என்று அஞ்சியபடி, அவருடைய அறைக்குள் தயக்கத்துடன் நுழைந்தேன். அவர் என்னை உட்காரச் சொன்னார். உட்கார்ந்தபிறகு, 'நம் நாளிதழின் பொருள் நிலை பற்றி இதுவரை கேள்விப் பட்டீர்களா? நெருக்கடி முற்றுகிறது: எப்போது தீரும் என்று தெரியவில்லை என்று அவர் சொல்லியதும் அவர் தொடர்ந்து பேசாதபடி, நான் குறுக்கிட்டேன். 'அய்யா! நான்தான், ஆசிரியர் குழுவில் கடைசியாகச் சேர்ந்தவன். ஆகவே தாங்கள் இசைவுதந்தால் நான் நாளை முதல் நின்றுவிடுகிறேன். தாங்கள் இதுவரை காட்டிய ஆதரவை மறக்க மாட்டேன்' என்று கூறினேன். 'துடிக்காதீர்கள். ஒரு மாதம் முன் அறிவிப்புக் கொடுக்க விரும்பு கிறேன் டாக்டர் வரதராசுலுவின் உரை முடிவதற்குள் மீண்டும் குறுக்கிட்டேன். 'முன்னறிவிப்பைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. நாளையே நின்றுவிட ஆயத்தமாயிருக்கிறேன்' என்றேன். என் சி-ரையில் எரிச்சலோகசப்போ சேரவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/472&oldid=787374" இலிருந்து மீள்விக்கப்பட்டது