பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43O நினைவு அலைகள் "மார்ச்சு முடியவாகிலும் இருங்கள்' என்று அவர் சொன்னதற்கு இசைந்தேன். மேலும் பத்து நாள்கள் என் துணை ஆசிரியர் பதவி நீடித்தது. திடீரெனத் தானாக வந்த அப்பதவி, தானாகவே, சட்டென்று போய்விட்டது. அது எனக்குப் பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது. ஆயினும் உள்ளம் உடையவில்லை. நான் கவலையில் மூழ்கவில்லை. என்னுடைய இயற்கை அத்தகையது என்று பொய் சொல்ல மாட்டேன். நான் படித்தவை எனக்கு ஊன்றுகோல்களாக உதவின. சென்றதினி மீளாது மூடரே என்று தொடங்கும் பாரதியின் பாடல் எனக்கு மனப்பாடமாகியிருந்தது. அது மின்னியது. ஜேம்ஸ் ஆலன் என்னும் ஆங்கில ஞானி, சாந்திக்கு மார்க்கம்', வலிமைக்கு மார்க்கம்', 'மெய்யறம்’, ‘மெய்யறிவு ஆகிய நூற்களை இயற்றினார். அவற்றைக் கப்பலோட்டிய தமிழறிஞர் வ.உ. சிதம்பரனார் தமிழில் மொழிபெயர்த்தார். தமிழில் வெளியான அந்நூல்களை நான் படித்து இருந்தேன். அவற்றின் கருத்துகளும் நினைவுக்கு வந்தன என்னை ஒரு நிலைப்படுத்தின. எனவே, "வருவது வரட்டும் என்று அவ்வேலை நீக்கத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தொடர்ந்தேன். மார்ச்சுத் திங்கள் இறுதியோடு தமிழ்நாடு துணை ஆசிரியர் வேலையும் போயிற்று. சோதனைக்கு மேல் சோதனை அடுத்த சில திங்கள், பலவகையிலும் படாத பாடுபட்டேன். ஊருக்குச்சென்று வாழ்ந்தால், உலகத்திலிருந்து விலகி, கிணற்றுத் தவளையாகி விடுவேனோ என்று அஞ்சினேன். சென்னையில் தங்கி இருப்பதற்கு வேண்டிய பணவசதியோ குறைந்திருந்தது. ஏன்? நெல்லின் விலை வீழ்ந்திருந்த காலம் அது. ஆகவே குடும்ப வருவாய் குறையத் தொடங்கியது. அவ்வேளை செலவு பெருகிற்று. அப்போது, ஒரு தம்பி, கல்லூரியில் சேர்ந்தான். அவன் செலவிற்கும் உயர்நிலைப் பள்ளியில் தங்கியிருந்த தம்பியின் செலவுக்கும் பணம் கண்டுபிடிக்க வேண்டும். ஆகவே நான் சென்னையில் காலங்கழிப் பதற்குப் பணம் கொடுப்பது என் தந்தைக்கு எளிதாக இல்லை. அதோடு, எனக்குப் பெண் கொடுக்க விரும்பியவர்கள், என் தந்தையிடம் சென்று இதையும் அதையும் கொடுப்பதாகக் கூறினார்கள் ஒவ்வொன்றையும் எனக்கு உடனுக்குடன் தெரிவிப்பார். என் கருத்தை அறிந்துவரத் துது அனுப்புவார். என்ன பதில் சொன்னேன்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/473&oldid=787375" இலிருந்து மீள்விக்கப்பட்டது