பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

аж, эн. э.ь» тэмчooэл 431 எந்த வாலிபனும் தனக்கென்று ஒரு வேலை தேடிக் கொள்வதற்கு 3. திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பது என் கொள்கை. தான் சம்பாதித்து மனைவியைக் காப்பாற்ற முடியாதவன், பெற்றோர் சொத்தை நம்பித் திருமணம் செய்து கொள்வது சின்னத்தனம். , னாரிடம் வரதட்சணை பெற்று வாழ்வது இழிவு. அப்படி வாழ நினைப்பவன் மனிதன் அல்லன். பின் யார்? ■鬥 கால்நடை மருத்துவமனைகளில் பராமரிக்கப்படும் காளைக்கு ஒப்பானவர்கள். அத்தகைய நிலைக்கு என்னைத் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை. இவற்றை வந்தவர்களிடம் வெளிப்படையாகச் சொல்லி அனுப்புவேன். இப்படி வந்ததையெல்லாம் தட்டிக் கழிக்கிறேனே என்று என் தந்தைக்கு எரிச்சல்; கவலையுங் கூட. நான் சொன்ன காரணம் முழு உண்மையா? இல்லை, பாதி உண்மை! மறுபாதியை அப்போது நான் வெளிப்படுத்தவில்லை. அது என்ன? நான் எந்தச் சாதி யில் பிறந்தேனோ அந்தச் சாதிக்காரனாக வாழ்வதில்லை என்ற முடிவுக்குப் பதினாறாவது வயதிலேயே வந்துவிட்டேன். அதன் கிளை முடிவாக, என் சாதியில் திருமணம் செய்து கொள்ளுவதில்லை என்று முடிவு செய்துவிட்டேன். 'காட்டைக் கடப்பதற்கு முன் கூச்சல் போடாதே" என்பது பழமொழி. இருபத்தொரு இருபத்திரண்டு அகவை வரையில் எந்தப் பெண்ணின் மேலும் காதல் கொள்ளாத நான், வேறுசாதியில்தான் திருமணம் செய்து கொள்வேன்' என்று சொல்வது, தொல்லையைக் காலத்திற்கு முன்பு தேடிக்கொள்வதாக முடியும். எனவே இக்காரணத்தை எவரிடமும் சொல்லாமல் நழுவிக் கொண்டிருந்தேன். பட்டினியுடன்போராட்டம் தமிழ்நாடு நாளிதழில் வாங்கிய மாத ஊதியம் முப்பத்தைந்தில், சில குபாய்கள் மிச்சப்படும். அவற்றைச் சேமித்து வைத்து இருந்தேன். அப்பணத்தைக் கொண்டு சில வாரங்களை ஒட்டினேன். அப்புறம் காப்பி குடிக்கவும் என் கையில் பணம் இல்லை. என் தம்பியிடம் சொல்லவும் நாணினேன். ஒரு நாள் முழுவதும் பட்டினி. அதை ஒளிப்பதற்காக, கொத்த வால்சாவடி மண்டியிலிருந்து, 'ாட்டிற்குப் போவதுபோல், மூன்று வேளையும் வெளியே சென்றேன். சிாட்வேயில் அன்று லோன்சு சதுக்கம் என்ற பெயரில் இருந்த பூங்காவிற்குச் சென்று சிறிது நேரத்தைப் போக்கிவிட்டு வருவேன். மண்டியில் அலுவலில் மும்முரமாக ஈடுபட்டிருந்த என் தம்பி, ”னைக் கூர்ந்து கவனிக்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/474&oldid=787376" இலிருந்து மீள்விக்கப்பட்டது