பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ து. சுந்தரவடிவேலு 433 –- வேலை கொடுக்க வேண்டியவர் எவர்? செங்கற்பட்டு மாவட்ட ஆணைக்குழுவின் தைைலவர். அப்போதைய தலைவரின் பெயர் என்ன? திரு செ. முத்தய்யா, அவர் பட்டதாரி. பெரிய இடத்து மாப்பிள்ளை. செங்கற்பட்டு மாவட்டத்தின் குறுநில மன்னர்களில் பெரிய குடும்பம் சூணாம்பேட்டை ஜமீன்தார் குடும்பம், அக்குடும்பத்தின் ஒரே மாப்பிள்ளை அவர். குடும்பத் தலைவர் திரு அருணாசலம், மைத்துனர் முத்தய்யாவை ஆணைக் குழுவின் தலைவராக்கி மகிழ்ந்தார். அந்த ஆணைக்குழுவின் உறுப்பினராகப் பல்லாண்டு தொண்டு புரிந்தவர் என் மாமா, திரு நெ.கோ. சுந்தரசேகரன். அவர்நீதிக்கட்சியின் துரண்களில் ஒன்றாக விளங்கியவர். செங்கற்பட்டில் நடந்த முதல் சுயமரியாதை மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவராக இருந்த திரு மண்ணுளர் கிருஷ்ணசாமி (செட்டியார்)க்கு வாக்கு அளித்து ஆணைக்குழுத் தலைவராக்கியவர். அவருக்குத் துணையாக விளங்கியவர். அக்காலத்தில், தமிழ்நாட்டில், சில மாவட்ட ஆட்சிக் குழுத்தலைவர்கள் நிகரற்ற நிர்வாகிகளாக விளங்கினார்கள். கோவை, திரு கா.ச. இரத்தினசபாபதி, சேலம் எல்லப்பர், செங்கை, ம. கிருஷ்ணசாமி, தஞ்சை பன்னிர்செல்வம் ஆகியோர் அவர்களில் சிலர். திரு கிருஷ்ணசாமிக்குப் புகழ் ஓங்க ஓங்க அழுக்காறு என்னும் களையும் வளர்ந்தது. அவை அவதுாறுகளாகக் கிளைத்தன. புரட்சிகரமான சுயமரியாதை மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது. அவருக்குப் பகையை வளர்த்தது. எனவே, நீதிக்கட்சியின் சார்பில், அவர் தலைவராக இருந்தது போதும் என்று நீதிக்கட்சி முடிவு செய்தது. அவரோடு துணைத்தலைவராக இருந்த திரு கல்பட்டு ஜெயராம் அவர்களைத் தலைவராக்க முடிவு செய்தார்கள். அப்படியே நடந்தது. என் மாமன் நீதிக்கட்சியிலேயே தொடர்ந்து தொண்டாற்றினார். புதிய தலைவரின் ஆட்சி நல்லவர் ஆட்சி; வல்லவர் ஆட்சி அல்ல. இப்போது, கீழே இருப்பவர்கள் நினைத்தால்தான் எதுவும் நகரும். * இருப்பவர்களுக்குக் கையூட்டு இல்லாமல், மாவட்ட ஆட்சியின் அலுவலகத்திற்குப் போய்ப் பயன் இல்லை. அல்வேளை, நீதிக்கட்சியின் கட்டுக் குலைந்து இருந்தது. காங்கிரசின் கை ஓங்கி வந்தது. எங்கள் மாவட்டத்தில், காங்கிரசே, மாவட்ட ஆட்சிக்குழுவை இயக்கும் அளவு, அது ஓங்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/476&oldid=787378" இலிருந்து மீள்விக்கப்பட்டது