பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ_து. சுந்தரவடிவேலு 435 - அக்கால இளைஞர் எவரும் இது வேண்டாம்: அது வரட்டும்' என்று சொல்லும் நிலையில் இல்லை. மூன்று நான்கு ஆண்டுகளாகக் காத்துக் கிடப்போர் முதலில் இடைத்ததைப் பற்றிக்கொள்ள வேண்டும். பிறகு வாய்ப்பு வந்தால், பெரிய பதவிகளுக்குத் தாவலாம். இத்தகைய நிலையில் அவ் வேலையை ஒதுக்கக்கூடாது என்பது புலனாயிற்று. அதற்குச் சம்பளம் 45-3-75 என்பதும் குறையாகத் தோன்றவில்லை. அவ் வேலையை நாடக்கூடாது என்பதற்கு வேறிரு காரணங்கள் எனக்குப் பட்டன. நான் அதுவரையில், ஊர் சுற்றிப் பழகாதவன். செல்லமாக வளர்ந்து விட்டவன்; தூய கிணற்று நீரைக் குடித்து வந்தவன், அவ்வேலைக்குப் போனால் திங்களுக்கு இருபது நாள்கள் ஊர் சுற்ற வேண்டுமே! அதை என்னால் சமாளிக்க முடியுமா? கண்ட கண்ட ஊர்களில், சேறு கலந்த குளத்து நீரை ஆடுமாடுகள் கழுவும் குளத்து நீரைக் குடிக்க மனம் ஒப்புமா? மனம் ஒப்பினாலும் உடலுக்கு ஒத்து வருமா? இவை என்னைப் பற்றியவை. மற்றொன்று என் மாமாவின் உரிமை. 'எனக்கு வேலை கொடுத்துவிட்டு, உங்களைத் தமக்கு அடிமை யாக்க நினைக்கிறாரோ என்னவோ? அவர் மேற்கொள்ளும் முடிவுகளுக் கெல்லாம் நீங்கள் ஆமாம் சாமியாக இருப்பீர்கள் என்று எதிர்பார்க் கிறாரோ என்னவோ? என் வேலைக்காக, உங்கள் கொள்கையையும் உரிமையையும் இழக்க வேண்டுமா? இக் கேள்விகளை என் மாமாவிடம் எழுப்பினேன். 'உன் மனுவைத் தலைவரிடம் கொடுக்கும்போது, உன்னுடைய வேலைக்கும் என்னுடைய ஆதரவுக்கும் முடிச்சுப்போடக் கூடாது என்று தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். "உன் தகுதி பற்றிக் கொடுத்தால் கொடுங்கள். நானும் என் கொள்கை அடிப்படையில், முடிந்த அளவிற்கு, தங்கள் முடிவுகளை, நடவடிக்கைகளை, ஆதரிக்கிறேன். 'சுந்தரவடிவேலுவிற்கு வேலைகொடுப்பதற்குக் கைமாறாக எல்லாவற்றையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பேன் என்று எதிர்பார்க்காதீர்கள் என்று சொல்லிவிடுவேன் என்று எனக்குப் பதில் கூறினார். அவருடைய கொள்கைப் பிடிப்பும் நாணயமும் பலரும் அறிந்தவை. எனவே அவர் ஆலோசனைப்படி, உதவிப் பஞ்சாயத்து அலுவலர் வேலைக்கு மனு எழுதிக் கொடுத்தேன். அதை மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டுச் சென்றார். அண்மைக்காலத்தில் குடும்பத்தவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செயலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/478&oldid=787380" இலிருந்து மீள்விக்கப்பட்டது