பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 நினைவு அலைகள் யாகிலும் என்னால் செய்ய முடிந்ததே என்று நானும் மனநிறைவு கொண்டேன். என் மனுவை, தலைவர் முத்தய்யாவிடம் நேரில் சேர்த்து விட்டதாகவும் மூன்று திங்களுக்குள் நியமன ஆணை வருவது உறுதி என்றும் என் மாமா ஊரிலிருந்து எழுதியிருந்தார். அவ்வேலையை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து, அது வலியவரும் என்று நம்பி, நாள்களைக் கழித்தேன். பரிந்துரை மயம் அப்போது திரு சா. குருசாமி - பிற்காலத்தில், தன்மான இயக்கத்தின் மூளை நரம்புகளில் ஒன்றாக விளங்கி, உயர்ந்த குருசாமி - உள்ளாட்சித்துறை தலைமை ஆய்வாளர் அலுவலகத்தில் எழுத்தராக இருந்தார். அவரை நான் அறிவேன். எனவே, செங்கற்பட்டு மாவட்ட ஆணைக்குழுவின் மேற்படி பரிந்துரை ஒப்புக்கொள்ளப்பட்டதா என்று கேட்டறிய, சில முறை அவர் வீட்டுக்குச் சென்றேன். அதுபற்றி விழிப்பாயிருந்து தகவல் கொடுக்க ஒப்புக் கொண்டார். இரு பார்வைக்கு இடையே, எப்படியோ இருபது நாள்கள் கழியவிட்டு விட்டேன். அத்தனை இடைவெளிக்குப் பிறகு, திரு. குருசாமியைக் கண்டபோது, 'உங்கள் முகவரியைக் கொடுக்காமல் போய்விட்டீர்கள். எங்கே தகவல் அனுப்புவது என்று தெரியவில்லை. 'மூன்று பதவிகளை உருவாக்க ஒப்புதல் கொடுத்து, பதினைந்து நாள்களுக்கு மேலாகிறது. மேற்கொண்டு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. "எங்கள் அலுவலகத்தில் நாராயணசாமி முதலியார் என்று ஒருவர் பணிபுரிகிறார். அவர் டாக்டர் குருசாமி முதலியாருக்கு மருமகன் முறையாம். அந்த டாக்டர், உங்கள் முத்தய்யா குடும்பத்திற்கு மருத்துவராம். டாக்டர் பரிந்துரையின்மேல், அவரை ஒரு பதவியில் நியமித்துவிட்டார்கள். 'இரண்டாவது இடத்திற்குக் காஞ்சிபுரம் டாக்டர் பி.எஸ். சீனிவாசன் என்வரின் மருமகனாம்; கிருஷ்ணன் என்ற பெயருடை யவராம். டாக்டர் செல்வாக்கால் அவரையும் நியமித்துவிட்டாராம். 'மூன்றாவது இடத்திற்கு யார் என்பது முடிவு ஆகவில்லை. இது கடைசிச் செய்தி. எங்கள் அலுவலகத்தின் தலைமை மேலாளர் திரு இராமச்சந்திர அய்யரே சொன்ன செய்தி. எனவே, உண்மையாக இருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/479&oldid=787381" இலிருந்து மீள்விக்கப்பட்டது