பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

E; நினைவு அலைகள் போனது போகட்டும், இங்கேயும் அங்கேயும் நாலு பேர் இதையும் அதையும் சொல்லி, பகல் உணவுத் திட்டத்தைக் கண்டிக்கிறார்கள். அதைச் சாக்காக வைத்துக்கொண்டு ஒதுங்கிக் கொள்ளட்டும். மெல்ல மெல்ல அலுவலகத்தோடு நிற்கட்டும். 'ஊர்சுற்றுவதை மெல்லக் குறைத்துக் கொள்ளட்டும். பகல் உணவுத் திட்டம் மேற்பார்வையில்லாத பயிர் போல, தானாகப் படுத்துவிடும். 'அவனுக்குப் பழிபடர்வதற்குள், முன்னமே கூப்பிட்டாங்களே . பேசாமல் தில்லிக்கோ, வேறு நாட்டுக்கோ போய் விடட்டும். இங்கேயிருந்து கெட்டுப் போக வேண்டாம். 'தூரத்துப் பச்சைக்கு மதிப்பு அதிகம். இவனும் தூர இருந்தால் ஏதோ பெரிதாக நினைத்துக் கொள்வார்கள். என்னவானாலும் நமக்குத் தொல்லையாக வரவேண்டாம். கண்டவர்களைப் படிக்க வைக்கப் பாடுபட வேண்டாம். 'அரசு, பகல் உணவுத் திட்டத்தை நடத்தச் சொன்னால்தான் என்ன? நடத்துகிற மாதிரி நடிக்கத் தெரியாவிட்டால், பட்டினம் போய் இத்தனை படித்துப் பயன் என்ன?" இப்படி உறவினர் தங்கவேலு முதலியார் சொன்னாரே ஏன் கேட்கவில்லை? பிடிவாதமாக இங்கேயே இருந்து பட்டிதொட்டி யெல்லாம் சென்று எல்லோரும் படிப்போம். ஒன்றாகப் படிப்போம். நன்றாகப் படிப்போம்' என்று முழங்கி, தூங்குவோரைத்தட்டி எழுப்பச் சொன்னது யார்? வயிறு இரைகிறது என்றால் சும்மா இருக்கலாமா? மேல் சாதிக்காரர்கள் இரைவதை ஏன் அலட்சியப்படுத்தினாய் அதிலும் 'உன்சாதி"க்காரன் இரைச்சலை அலட்சியப்படுத்தியிருக்கக் கூடாதே. என்றைக்கும் அவர்கள் வைத்ததுதானே சட்டம். யார் வந்தாலும் போனாலும் முதலியார்களுக்குத்தானே செல்வாக்கு பல்லவன் பாராண்டாலும், சேக்கிழார் செங்கோல் செலுத்தினாலும், விஜயநகரத்தான் கொடிகட்டிப் பறந்தாலும், நவாப்பின் கைகளிலே நாடு சிக்கினாலும், பரங்கியர் ஆட்சியிலும் இவர்கள் செல்வாக்கிற்குக் குறையில்லையே! ஏன்? காங்கிரசு ஆண்டாலும், தி.மு.க. ஆண்டாலும், வேறு யார் ஆண்டாலும் இவர்கள் வைத்ததே நீதி! அறிவாளிக்கு ஒரு சொல் உனக்கேன் இவர்களைப் பகைத்துக் கொள்ளக்கூடாது என்பது புரியவில்லை. பத்தாண்டுகளுக்கு முன்புகூட உன்னை அழைத்தார்களே! தொண்டை மண்டல வேளாளர் சங்கம் என்று வைத்துக்கொண்டால் மற்ற சாதிக்காரன் பகைவரும் சேக்கிழார் கல்விக் கழகம் என்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/48&oldid=787382" இலிருந்து மீள்விக்கப்பட்டது