பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெ. து சுந்தர வடிே வலு 437 பாக்கியுள்ள இடத்திற்கு உடனே முயலுங்கள். இப்படி ஆலோசனை கூறி அனுப்பி வைத்தார். திரு. குருசாமி. உள்ளுர எனக்கு ஏமாற்றம், மனுவைக் கேட்டுப் பெற்றுக்கொண்டபின் இப்படிச் செய்துவிட்டாரே என்று ஆற்றாமைப்பட்டேன். 60. இவன் நல்ல பையன் கடிதம் எழுதினேன் 'மூன்றில் இரண்டு பதவிகளுக்கு ஆள்களை நியமித்து விட்டார்கள். மூன்றாவது பதவியைப் பெற்றுத்தர, உடனே புறப்பட்டு வாருங்கள் என்று என் மாமாவிற்குக் கடிதம் எழுதினேன். அதன்படி, அவள் சென்னைக்கு வந்தார். என் தந்தையும் உடன் வந்தார். எங்கே போனாலும் அவர்கள் இருவரும் ஒன்றாகவே சேர்ந்து போவார்கள். தனித்தனியே போய் வந்தது சில பொழுதே. இருவரும் என்னை அழைத்துக்கொண்டு, மாவட்ட ஆட்சிக் குழுத் தலைவர் திரு செ. முத்தய்யாவிடம் சென்றார்கள். அவர் சென்னையில் இருந்தார். எங்கே இருந்தார். கீழ்ப்பாக்கத்தில், தோட்டச்சாலையில் அமைந்துள்ள, 'பார்பிகன் என்னும் பங்களாவில் இருந்தார். அது திருமதி முத்தய்யாவின் அண்ணார் திரு. அருணாசலம் அவர்களுடைய பங்களா. - நாங்கள் மூவரும் சென்றபோது, காலைநேரம். திரு முத்தய்யா, தாழ்வாரத்தில் சாய்மான நாற்காலியில் அமர்ந்திருந்தார். இரு பக்கங்களிலும் போடப்பட்ட நாற்காலிகளில் எங்களை அமரச் சொன்னார். அப்படி அமர்ந்ததும் 'சிற்றுண்டி சாப்பிடலாமா?' என்று கேட்டார். 'சிற்றுண்டியை முடித்துக்கொண்டே வந்துள்ளோம் என்று பதில் கூறினார், என் தந்தை. எனவே, காப்பி கொண்டுவந்து கொடுக்கும்படி ஆனையிட்டார். இதற்கிடையில் என் மாமா, என்னை திரு. முத்த ய்யாவுக்கு அறிமுகப்படுத்தினார். என் வேலைபற்றி வந்து இருப்பதாகக் கூறினார். உடனே, திரு முத்தய்யா, திரு. குருசாமி என்னிடம் சொல்லிய திகவலைச் சொன்னார். 'இப்போது ஒரு பதவியே பாக்கியிருக்கிறது. அதற்குப் பலத்த போட்டி உன் மருமகனுக்குக் கொடுப்பதாகச் சொல்லி, நான்தான் அனுவை வாங்கி வரச் சொன்னேன். என் நிலையை ஒளிப்பானேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/480&oldid=787383" இலிருந்து மீள்விக்கப்பட்டது