பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

438 நினைவு அலைகள் காங்கிரசு கட்சியின் ஆதரவு எனக்குத் தேவை. அதனால் டாக்டர் சீனிவாசன் மருமகனுக்குக் கொடுக்க வேண்டியதாயிற்று. 'இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலுவலகத்தோடு நமக்குத் தொடர்பு உண்டு. அங்கு வேலையிலிருந்த நாராயணசாமி முதலியாரை வேலைக்கு எடுத்துக்கொண்டால், அத்தொடர்பு நல்லபடியிருக்கும். ஆகவே, அவரை நியமித்துவிட்டேன். 'மூன்றாவது பதவிக்கு திரு சண்முகம் ஒருவரைப் பரிந்துரைத் துள்ளார். அப்பா கம்பெனி திரு கே. வேங்கடசாமி ஒரு வரைப் பரிந்துரைத்துள்ளார். அப்பரிந்துரைகளை எப்படித் தள்ளிவிடுவது என்று தெரியவில்லை. அவர்கள் கைகளிலும் ஒட்டுகள் இருக்கின்றன. என்று சொல்லி வரும் வேளை, சூணாம்பேடு ஜமீந்தார் திரு. அருணாசலம் அப்பக்கம் திடீரென்று வந்தார். ஜமீன்தாரின் கோபம் நாங்கள் மூவரும் எழுந்து வனங்கினோம். திரு. அருணாசலம் என்னை அடையாளங் கண்டு கொண்டார். 'உன்னைத்தானே முன்பு சேலம் ஜமீந்தார் பங்களாவில் பார்த்தேன்' என்று கேட்டார். 'ஆம்' என்றேன். ஒரு பிடிபிடித்தார். 'மூன்று மாதமாக என்ன செய்து கொண்டிருந்தாய் மனுப் போட்டதும் வந்து பார்த்திருக்க வேண்டாமா? போகட்டும், கொஞ்ச நாள் பொறுத்தாகிலும் ஏன் வரவில்லை பெரிய பட்டம் பெற்றுவிட்டதாக நினைப்பா? வேலை, வீடுதேடி வரவேண்டுமா? 'மாமனைக் கூப்பிட்டுக்கொண்டு வந்து இருக்கிறாயே! அவர் இல்லாவிட்டால் என்ன செய்வாய் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பாயா?" என்று மடமடவென்று பொரிந்து தள்ளினார். நான் ஊமையாக இருந்தேன். அது, அவருடைய சினத்தை அதிகப்படுத்தியது. மீண்டும், 'உன் மாமன் இல்லாவிட்டால், என்ன செய்வாய் ஏன்? பதில் சொல்லக்கூட முடியவில்லையா? அவ்வளவு பெரியவனா நீ? இச்சுடு சொல்லைக் கேட்டதும் என்பதில் பீறிட்டது. 'பெரியவன் அல்ல. நான் பிறக்காவிட்டால், என்ன ஆகியிருக்கலாம் என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன்' என்னும் பதில் கொட்டியது. 'பாரப்பா இவனுக்கு எவ்வளவு கொழுப்பு? எப்படிப் பதில் சொல்லுகிறான் பார்த்தாயா? இப்பவே இப்படிப் பதில் சொல்பவன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/481&oldid=787384" இலிருந்து மீள்விக்கப்பட்டது