பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44C) நினைவு அலைகள் 'உடனே, காலையில், அவருடைய பங்களாவில் நடந்ததைச் சொன்னார். 'நல்ல பையனா மரியாதையில்லாமல் பதில் சொன்னான்; ' என்று கேட்டார். 'உங்களைத் தெரியாதவர்களுக்கு உங்கள் கேள்விப் போக்கு எரிச்சல் ஊட்டும். அவனோ இளைஞன்: பளிச்சென்று பதில் சொல்லியிருக்கலாம். அவனை எனக்குப் பல ஆண்டுகளாகத் தெரியும். வாரா வாரம் என் மைத்துனர் சீனிவாசனைப் பார்க்க வருவான். அதனால் எனக்கு நன்றாகத் தெரியும். அவனைப் போல அவ்வளவு அடக்கமான, ஒழுங்கான, நாணயமான பையன்கள், பலர் இல்லை என்று சொன்னேன். ' 'அப்படியானால், உடனே போய், ஆட்சிக்குழுத் தலைவரிடம் சொல்லி விடுகிறேன் என்று சொல்லிக் கொண்டே புறப்பட்டுப் போனார். என்று திரு பக்தவத்சலம் கூறினார். திரு சண்முகமும் திரு. வேங்கடசாமியும் ஆளுக்கொருவரைப் பரிந்துரைத்து இருப்பதை திரு பக்தவத்சலத்திடம் கூறினார், என் மாமா. 'அவர்களை நீங்களே போய்ப் பாருங்கள்' என்று சொல்லி அனுப்பினார். திருவொற்றியூர் சண்முகம் முதல் பரிந்துரை ஆதரவாக இருப்பதை அறிந்து கொண்டு மகிழ்ச்சியோடு திருவொற்றியூருக்குப் புறப்பட்டுச் சென்றோம். அங்கே சென்றபோது, திரு சண்முகம் வெளியே சென்றிருந்தார். அவர் வரும்வரை காத்திருந்தோம். திரு சண்முகம் வந்ததும், அவரிடம் வந்த தைப் பற்றி என் மாமா பேசினார். எல்லாவற்றையும் திரு சண்முகம் பொறுமையாகக் கேட்டார் இறுதியில், நான் ஒருவருக்குப் பரிந்துரை செய்திருப்பது உண்மை. அவர் எனக்கு நெடுநாளாக வேண்டியவர். இவ்விளைஞர் மனுப் போட்டிருப்பது தெரியும். இவர் இவ்வேலைக்கு வருவார் என்று நாங்கள் நம்பவில்லை. ஆனர்ஸ் பட்டம் பெற்ற மனுதாரர். இவர் ஒருவரே. நம்மவர்க்குள், உயர் பட்டம் பெற்றவரை ஒதுக்கிவிட்டுச் சாதாரணப்பட்டம் பெற்றவரைத் தேர்ந்தெடுப்பது சரியல்ல. எல்லாரிலும் அதிகத் தகுதியுடைய இவருக்கே கொடுக்கும்படி தலைவரிடம் சொல்லிவிடுகிறேன். என் ஆளோ வெறும் பட்டதாரி: எழுத்தர் வேலை கிடைத்தாலும் மோசமில்லை. அதை நான் பார்த்துக் கொள்ளுகிறேன்' என்று மிகுந்த அன்புடன் கூறினார். விரைந்து தலையிடுமாறு வேண்டிக் கொண்டோம். திரு சண்முகமும் அதற்கு உடன்பட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/483&oldid=787386" இலிருந்து மீள்விக்கப்பட்டது