பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 443 அங்கு ஆட்சிக்குழுச் செயலர், திரு அரங்கநாதனைக் கண்டு வணக்கம் செலுத்தினோம். அவர் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்; நல்ல நாள் பார்த்து வேலையில் சேர்ந்து கொள்ளும்படி கூறினார். எனக்கோ, என் தந்தைக்கோ நல்லநாளில் நம்பிக்கை கிடையாது. ஆனால், அன்றே வேலையில் சேர்வதைத் தவிர்க்க எண்ணினோம். ஏன்? உதவிப் பஞ்சாயத்து அலுவலருக்கு மேலதிகாரி, மாவட்டப் பஞ்சாயத்து அதிகாரி ஆவார். பிந்தியவரே முந்தியவருக்கு ஆணையிட வேண்டும். அப்போது செங்கற்பட்டு மாவட்டப் பஞ்சாயத்து அதிகாரியாக இருந்தவர், திரு தனசிங் என்பவர். அவர், இன்டர்மீடியட்டில் என்னுடன் படித்தவர் என் நண்பருங்கூட: அவர் வெறும் இளங்கலைப் படிப்பில் சேர்ந்ததால், ஒராண்டு முன்னதாகக் கல்லூரிப் படிப்பை முடித்தார். திரு தனசிங் பிற்காலத்தில் இராஜாஜியின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த திரு முனுசாமியின் உறவினர். எனக்கு முன்பு மாவட்டப் பஞ்சாயத்து அலுவலராகவே வேலைக்கு வந்தவர். அவருக்கு அப்போது மாற்றுதல் ஆணை வந்திருந்தது; இரண்டொரு நாள்களில் புதிய அலுவலர் வந்து சேருவார் என்று கேள்விப்பட்டோம். சில நாள்கள் பொறுத்துக்கொண்டால், தன்னோடு படித்தவரின் கீழ் வேலை பார்க்கும் சங்கடம் நீங்கிவிடும், என்று எண்ணி, வேலையில் சேர்வதைத் தள்ளிப்போட முடிவு செய்தோம். 'இன்றைக்குச் சேர்ந்தாலும் வரிசையில் மூன்றாவது. நான்கு நாள்களுக்குப் பிறகு சேர்ந்தாலும் அதேதான். வடிவேலுவின் மனம் புண்படவேண்டாம். நான்கு நாள்கள் பொறுத்தே சேரட்டும் என்று, என் அப்பா எனக்கு ஆதரவாக முடிவு செய்தார். அம்முடிவோடு, அலுவலகத்தில் வேறு சில மேற்பார்வை யாளர்களைக் காண்பதில் நாட்டம் செலுத்தினோம். அவ்வேளை தூது ஒன்று வந்தது. அலுவலில் சேர்ந்தேன் எவர் அனுப்பிய துது? என் கல்லூரி நண்பர் திரு தனசிங் அனுப்பிய தூது. ஆம் அப்போதைய செங்கற்பட்டு மாவட்டப் பஞ்சாயத்து அலுவலர் அனுப்பிய துது. செய்தி என்ன? அலுவலகத்தை விட்டுப்போகுமுன், தன்னை வந்து பார்த்து விட்டுப் போகும்படி செய்தி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/486&oldid=787389" இலிருந்து மீள்விக்கப்பட்டது