பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைப்பின் கீழ்க் கூடுவோம். அதற்கு உடந்தையாக உள்ள பெரிய அதிகாரிகளின் பெயர்களையெல்லாம் நேரில் சொல்லி, உன்னை அழைத்தார்களே அந்தக் கடைசி வாய்ப்பையும் இழந்துவிட்ட உன்னை என்ன சொல்லுவது? யானைகள் சும்மா இருக்குமா? == 'கெட்டிக்காரனாக இருந்தால், சட்டி சுட்டது: கையும் விட்டது' என்று புதிய திட்டங்களை விட்டுவிட்டு, இருந்த இடத்தில் இருந்தபடியே, கல்வி வல்லுநராகத் தன்னை மட்டும் வளர்த்துக் கொண்டிருக்கலாமே. இந்த நூலையும் அந்த நூலையும் கொண்டுவா. இதில் இதையும், அதில் அதையும் எடுத்து ஓர் அதிகாரமாக்கு ' என்றால், அதை நிறைவேற்ற எத்தனை ஆசிரியர்கள் காத்துக் கிடந்தார்கள்! பிறர் உழைப்பைச் சுரண்டாதே, என்னும் வரட்டுத் தத்துவத்தால் வாய்ப்புகளை இழந்தாய்? இப்படிப் பல அதிகாரங்களைச் சேர்த்த பிறகு, நூலாக வெளியிட்டிருந்தால், பணத்துக்குப் பணமும் குவிந்திருக்கும்; பெயரும் பெரிதாகி இருக்கும். இவற்றில் சிறிது சிந்தனை செலுத்தாமல், மேலும் பிடிவாதமாக சுழன்று சுழன்று, சீருடை வழங்க ஏற்பாடு செய்யச் சொன்னது யார்? ஊராரை ஊக்குவித்து, பள்ளிச் சீரமைப்பு இயக்கத்தை ஏன் முடுக்கிவிட்டாய்? தலைமுறை தலைமுறையாக வாழ்வு பெற்றவர்கள் வெறுக்கிறார்கள் என்பதை உணர்ந்த பிறகும், 'எல்லோரும் வாழ்வோம், நன்றாக வாழ்வோம், ஒன்றாக வாழ்வோம்' என்று தமிழகமெங்கும் முழங்கச் செய்ததைக் காட்டிலும் முட்டாள்தனம் உண்டா? அதிகார விலங்கை மாட்டிக் கொண்டவன் தொண்டனாக மாறுவதே பொருந்தாது. இலட்சக் கணக்கான ஆசிரியர்களையும் சமுதாய உணர்வுப் பேய் பிடித்த தொண்டர்களாக்கியது எவ்வளவு பெரிய தவறு? அதற்காக உன்னைக் கழுவில் அல்லவா ஏற்றியிருக்க வேண்டும்? காலம் இத்தனை குற்றங்களையும் மறந்தது; மன்னித்தது: துணைவேந்தராக்கியது. பிறகாவது புத்தியோடு நடந்திருக்கலாமே! எந்தெந்தப் பெரியவர்கள் வீட்டுப் பிள்ளைகள் என்ன தேர்வு எழுதுகிறார்கள்? யாருடைய வினாத்தாள்களை எவரிடம் அனுப்பினால் பலிக்கும்படி சாடை காட்ட முடியும்? இப்படி முன்யோசனையோடு அப்படிப்பட்ட உதவிகளைச் செய்து, பெரியவர்களுக்கு நெருக்கமாகிய பிறகு, மளமள வென்று உயர்ந்த நண்பர்கள் பலரை உனக்குத் தெரியுமே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/49&oldid=787393" இலிருந்து மீள்விக்கப்பட்டது